ஊட்டியாணி ஐராவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
ஊட்டியாணி ஐராவனேஸ்வரர் திருக்கோயில்,
ஊட்டியாணி, கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
ஐராவனேஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
ஊட்டியாணி பெயரே புதுமையாக இருக்கிறதல்லவா? முதன் முதலில் சிவன் உயிர்களுக்காக உணவுதரும் நெற்பயிர் வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர். ஊட்டு+ஆனை என்பதே ஊட்டியாணி. ஊட்டு என்றால் உணவளித்தல் என பொருள், ஆனை என்பது ஐராவதம், ஐராவதம் வழிபட்டதால் இப்பெயர்.
இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. சிறிய கிழக்கு நோக்கிய இத்திருக்கோயில் இறைவன்- ஐராவனேஸ்வரர் மற்றும் இறைவி- அகிலாண்டேஸ்வரி இறைவன் கிழக்கும் அம்பிகை தெற்கு நோக்கியுள்ளனர். தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சண்டிகேஸ்வரர், விநாயகர் மற்றும் பாலமுருகன் உள்ளனர். கருவறையில் சிறிய லிங்கமூர்த்தி, அதன் வாயிலில் விநாயகர் முருகன் உளள்னர். அம்பிகையும் சிறிய அளவில் உள்ளார். எதிரில் சிறிய நந்தி பலிபீடம், சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். சிறிய பைரவர் தெற்கு நோக்கி உள்ளார்.
பழம் கோயில் சிதிலமடைந்து போன பின்னர் பத்து ஆண்டுகளின் முன்னம் எடுப்பித்த கோயில் தான் இது. பழம்திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது. சோழர்கள் கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று.
புராண முக்கியத்துவம் :
சிவனடியார்கள் சிலர் இக்கோயிலில் சிவதரிசனம் செய்து விட்டு தங்கியிருந்தார்கள் அவர்கள் தானம் பெற்றுதான் உணவு அருந்துவார்கள். ஆனால் இப்பகுதியில் விவசாயம் இல்லாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்தார்கள் அதனை உணர்ந்த சிவனடியார்கள் தானம் கேட்டு செல்லவில்லை. சிவனடியார்கள் பசியில் இருப்பதை அறிந்த சிவன். அவர்களின் பசியைப்போக்க சிவனே தானம் கேட்டு சென்றார், அவருக்கு கிடைத்த நெல் மணிகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து சிவனடியார்கள் பசியை மட்டுமல்லாமல் மக்களின் பஞ்சத்தையும் போக்கினார். சிவனே தானம் கேட்டு சென்றதால் இவரை பிச்சாண்டார் என்றும் அழைப்பார்கள். முதன் முதலில் சிவன் ஆன்மாக்களுக்காக நெற்பயிரை வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம். சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணயில் இருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஊட்டியாணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி