Saturday Nov 16, 2024

ஊட்டி சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், நீலகிரி

முகவரி

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை, நீலகிரி மாவட்டம் – 643 001. போன்: +91-423-244 2754

இறைவன்

இறைவி: மகா மாரியம்மன் , மகா காளியம்மன்

அறிமுகம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோயில் விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் காவல் தெய்வங்கள் வாழும் கோயிலாக ஊட்டி மாரியம்மன் கருதப்படுகிறது, ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயமான இதில், 36 நாள்கள் பிரம்மோற்சவம் நடக்கும் அபூர்வ ஆலயமாகத் திகழ்கிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், கோயில் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. ஒரு மாதம் நடக்கும் இத்திருவிழாவின்போது, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் தங்களது பாரம்பர்ய முறைப்படி அம்மனுக்கு அலங்காரம்செய்து தேர்பவனி நடத்துவது வழக்கம்.

புராண முக்கியத்துவம்

அந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களும், தெய்வீக மணம் கமழும் முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அதிலிருந்து இக்கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.

நம்பிக்கைகள்

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் உடனடியாக குணமாகிறது. மேலும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், கண்பார்வை இழந்தவர்கள் இங்குள்ள மாரியிடம் வேண்டிக் கொண்டால் பூரண குணமடைகிறார்கள். இவை தவிர குழந்தை பாக்கியம் திருமணபாக்கியம், விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்வீ றிருக்கும் அரிய தலம். இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம். காட்டேரியம்மன் : இங்குள்ள காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பிணி, பில்லி சூனியம், செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளுக்கு திருஷ்டி நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை வரம் கிடைக்கும், வண்டிமாடு கால்நடைகளுக்கு கட்டுவதால் நல்ல பலன்கள் ஏற்படுகிறது.

திருவிழாக்கள்

நேர்த்திருவிழா (பிப்ரவரி மாதம்) 28 நாட்கள் இந்த திருவிழா நாட்களில் துர்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன், பகவதி என பல்வேறு திருக்கோலங்களில் ஆதிபராசக்தி எழுந்தருளி திருவீதி வீ உலா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தேர் வீதி வீ உலா வரும் போது பக்தர்கள் உப்பு அள்ளி வீசுவீகின்றனர். உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் முழுமையாக நீங்கி அம்மன் அருள் பெறுவதாக நம்பிக்கை. அம்மாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருநாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஊட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஊட்டி

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top