உளுந்தாம்பட்டு கைலாசநாதர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
உளுந்தாம்பட்டு கைலாசநாதர் சிவன்கோயில், உளுந்தாம்பட்டு, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607107.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சியம்மன்
அறிமுகம்
கடலூர் மாவட்டத்தின் வடமேற்கு எல்லை கிராமம் இந்த உளுந்தாம்பட்டு. பெண்ணை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. பண்ருட்டி- கண்டராக்கோட்டை- கரும்பூர்- ஏனாதிமங்கலம்- உளுந்தாம்பட்டு என செல்லவேண்டும். பண்ருட்டியில் இருந்து இருபது கிமீ. தூரத்திற்கு குறையாது. இக்கோயில் கிழக்கு நோக்கியது, ஆனால் கோயிலுக்கு வாயில் தென்புறம் வைக்கப்பட்டுள்ளது, கிழக்கில் செங்கல் சாளரம் உள்ளது. இறைவன் கைலாச நாதர் கிழக்கு நோக்கியும், இறைவி காமாட்சியம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் வாயில் அருகில் விநாயகர் உள்ளார். கோயில் இந்து அறநிலைய துரையின் கீழ் உள்ளது, அவ்வப்போது ஒருகால பூஜைக்காக ஒதுக்கப்படும் தொகையில் கோயிலில் விளக்கேற்றும் பணிகள் நடைபெறுகின்றன. கோயில் அருகில் ஒரு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்குகிறது, அதனால் இப்பகுதி சற்று மேடான நிலையில் சில அடிகள் இறங்கியே கோயிலுக்குள் செல்லவேண்டி உள்ளது. கோயில் குடமுழுக்கு கண்டு பல வருடங்கள் கடந்துவிட்டன, இறைவன் திருமேனி அஷ்டபந்தனம் உதிர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, எண்ணை கண்டு பல மாதங்களாகிவிட்டன.
புராண முக்கியத்துவம்
பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் அனைத்திலும் சமணம் சார்ந்த சிலைகள், அடையாளங்கள் கிடைத்துள்ளன. இவ்வூரும் அதில் அடக்கமே. பின்னர் சைவம் சார்ந்த பின் கட்டப்பட்ட கோயில் இது என கொள்ளலாம். இறைவன் கைலாசநாதர் என்பதால் இது 10ஆம் நூற்றாண்டு கோயிலாகலாம். செங்கற்கள் வடிவமும், கோயில் உட்புற வடிவமும் அதனை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உளுந்தாம்பட்டு
அருகிலுள்ள இரயில் நிலையம்
விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி