உலியன்னூர் மடத்திலப்பன் கோயில், கேரளா
முகவரி
உலியன்னூர் மடத்திலப்பன் கோயில், உலியன்னூர் கோயில் சாலை, ஆலுவா தாலுகா, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா 683108
இறைவன்
இறைவன்: மடத்திலப்பன் (சிவன்) இறைவி: பார்வதி தேவி
அறிமுகம்
ஸ்ரீ உலியன்னூர் கோவில் கேரளாவின் மிகப்பெரிய கோவிலில் ஒன்றாகும். சிவலிங்கமும் மிகப் பெரியது, கிழக்கு நோக்கி உள்ளது. பின் பக்கத்தில், பார்வதி தேவி தரிசனம் கொடுக்கிறாள். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலுவா தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் உலியன்னூர். பெரியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள உலியன்னூர், ஸ்ரீ மகாதேவர் கோயில் அல்லது உலியன்னூர் மடத்திலப்பன் மகாதேவர் கோயில் என அழைக்கப்படும் மகாதேவர் கோயிலுக்கு இந்த கிராமம் பிரபலமானது. இந்த கோயிலின் தெற்கே 12 அடி தூரம் ஸ்ரீ மடதிலப்பன் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு தெற்கே நுழைவாயிலில் சுயம்பு கணபதி உள்ளார். இந்த கோயில்கள் அனைத்தும் உலியன்னூர் மகாதேவரின் கோயில் வளாகத்தில் உள்ளது. உலியன்னூர் கோயில் பாரம்பரிய மரபுடன் கட்டப்பட்டது. இந்த கோயில் தற்போது முற்றிதுமாக இடிந்து கிடக்கிறது. மற்றும் செங்கற்சுவர் மோசமான நிலையில் உள்ளது. இந்த கோயிலின் கர்ப்பக்கிரகம் 42 மீட்டர் சுற்றளவு கொண்டது, இது பெருந்தச்சனின் கட்டிடக்கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரதான தெய்வம் சிவன். பார்வதி தேவியும் இங்கு அருள்புரிகிறாள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உலியன்னூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆலுவா
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி