இளமங்கலம் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
இளமங்கலம் சிவன்கோயில்,
இளமங்கலம், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாரூரில் இருந்து திருத்துறைபூண்டி சாலையில் பத்து கிமீ தூரம் வந்தவுடன் மாவூர் பாலத்தை தாண்டி வலதுபுறம் செல்லும் வடபாதிமங்கலம் சாலையில் நாட்டியத்தான்குடி, ஊட்டியாணி தாண்டியதும் உள்ள ஊர் தான் இளமங்கலம். சிறிய ஊர்தான் இரண்டு மூன்று தெருக்கள் தான், ஊரின் கிழக்கில் ஒரு பழமையான சிவன் கோயில் இருந்துள்ளது, காலப்போக்கில் கோயில் சிதிலமாகி அந்த சிதிலங்கள் கூட காணாமல் போயின. மீதமிருந்தது ஒரு மண்திட்டும் ஒரு லிங்கமூர்த்தியும் ஒரு விநாயகரும் தான். ஒரு வேம்பின் கீழ் இருக்கும் இந்த மண்திட்டு இறைவனுக்கு தகர கொட்டகை வேயப்பட்டுள்ளது. அருகில் கோயில் கட்ட ஆரம்பித்து பணிகள் தரை மட்டத்துடன் நின்று போயுள்ளன.
கோயில் இடம் தெரியாமல் ஒரு பெண்மணியிடம் சிவன் கோயில் எங்குள்ளது என கேட்க அப்பாவும் புள்ளையும் இருக்கும் கோயில் தானே? என கேட்டு கோயில் இருக்குமிடம் தெரிவித்தார்.
பாத்திரத்தின் அளவுக்கேற்றாற்போல் நீர் தன்னை மாற்றிக்கொள்வது போல் இறைவனும் இது போன்ற கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் தன் பெயரை மாற்றிகொள்கிறார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இளமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி