இலண்டன் முருகன் கோயில், இங்கிலாந்து
முகவரி :
இலண்டன் முருகன் கோயில்,
78-90 சர்ச் சாலை, இலண்டன் E12 6AF,
இங்கிலாந்து
இறைவன்:
முருகன்
அறிமுகம்:
52 அடி கொண்ட கோபுரம் இந்த ஆலயத்தின் நுழைவு வாசலாக அமைந்திருக்கிறது. பளபளப்பான இந்திய கிரானைட் ஓடுகளால் தரை பதிக்கப்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்கள், அந்த தெய்வங்களைச் சுற்றி மென்மையாக விழும் ஒளிவிளக்கு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் முருகப்பெருமான் பிரதான தெய்வமாக, கிரானைட் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரது வலது பக்கத்தில் சிவபெருமானும், இடது பக்கத்தில் கணபதியும் வீற்றிருக்கிறார்கள்.
மேனர் பார்க் என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயத்தில் சிக்கலான பல தெய்வ வடிவமைப்புகள், இந்திய பராம்பரிய கல்வெட்டு கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்பு கிரானைட் கற்களால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு மும்மூர்த்திகளான பிரம்மா, சிவன், மகாவிஷ்ணு ஆகியோரின் மூன்று முகங்களும், முருகப்பெருமானின் திருமுகத்தோடு ஒருமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்து சமய கோட்பாடுகளின்படி, இந்திய கட்டிடக்கலை நிபுணர் முத்தையா ஸ்தபதி மற்றும் தலைமை பூசாரி நாகநாதசிவம் குருக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டிருக்கிறது, இந்த ஆலயம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சர்ச் சாலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
வூட்கிரேஞ்ச் பூங்கா ( Woodgrange Park)
அருகிலுள்ள விமான நிலையம்
இலண்டன் சிட்டிவிமான நிலையம்