இலண்டன் பக்திவேதாந்தமேனர் (ISKCON), இங்கிலாந்து
முகவரி :
பக்திவேதாந்த மேனர் (ISKCON),
தரம் மார்க், ஹில்ஃபீல்ட் எல்என்,
ராட்லெட், வாட்ஃபோர்ட் WD25 8EZ,
இலண்டன், இங்கிலாந்து
இறைவன்:
கிருஷ்ணர்
அறிமுகம்:
‘பக்திவேதாந்த மேனர்’ என்றழைக்கப்படும் கவுடியா வைஷ்ணவக் கோவில், ஆல்டன்ஹாம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. ‘ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என்று அழைக்கப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி சங்கம் (ISKCON), இந்த ஆலயத்தை நிர்வகித்து வருகிறது. முன்பு ‘பிக்கோட்ஸ் மேனர்’ என்று அழைக்கப்பட்ட இந்த மாளிகை, பிப்ரவரி 1973-ல் முன்னாள் பீட்டில் ஜார்ஜ் ஹாரிசனால், ஹரே கிருஷ்ணா சமூகத்திற்கு வழங்கப்பட்டது. மத்திய லண்டனில் உள்ள ராதா கிருஷ்ணா கோவிலில் பெருகி வரும் பக்தர்களுக்கு இடமளிக்க முடியாத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நன்கொடைக்குப் பிறகு அருகில் இருந்த வீடுகளை வாங்கி, இந்த ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்திற்கு 17 ஏக்கர் நிலமும் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களின் போது, இங்கு சுமார் 60 ஆயிரம் பேர் வரை தங்க முடியும்.
காலம்
1973 ஆம் ஆண்டு
நிர்வகிக்கப்படுகிறது
ISKCON
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஹில்ஃபீல்ட் லேன் Hilfield Lane
அருகிலுள்ள இரயில் நிலையம்
புஷே நிலையம் (லண்டன் ஓவர்கிரவுண்ட்) Bushey Station (London Overground)
அருகிலுள்ள விமான நிலையம்
லண்டன் ஹீத்ரோ (LHR) விமான நிலையம் London Heathrow (LHR) Airport