இலண்டன் சுவாமி நாராயண் மந்திர் (BAPS), இங்கிலாந்து
முகவரி :
சுவாமி நாராயண் மந்திர் BAPS,
பிரமுக் சுவாமி சாலை, நீஸ்டன்,
இலண்டன் NW10 8HW, இங்கிலாந்து
இறைவன்:
சுவாமி நாராயண்
அறிமுகம்:
இங்கிலாந்தின் பழமையான ஆலயங்களில் ‘சுவாமி நாராயண் மந்திர்’ மிகவும் முக்கியமானது. இது இங்கிலாந்தின் நீஸ்டன் நகரில் அமைந்துள்ளது. இது பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்தி கட்டப்பட்டது. மதச்சார்பற்ற கட்டமைப்புகளுக்கு மாறாக, ஐரோப்பாவின் முதல் இந்து கல் கோவில் இதுவாகும். இது 1995-ல் பிரமுக் சுவாமி மகாராஜாவால் நிறுவப்பட்டது. அக் ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பின் ஒரு அங்கமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
கோவில் வளாகத்தில் அலுவலகங்கள், புத்தகக் கடை, உடற்பயிற்சி கூடம் மற்றும் ‘இந்து மதத்தைப் புரிந்துகொள்வது’ என்ற பெயரிடப்பட்ட ஒரு கலாசார மையம் ஆகியவையும் உள்ளன. இவ்வாலய கட்டுமானப் பணிகள் 1992-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. இந்த கோவிலின் அடித்தளத்திற்காக 4 ஆயிரத்து 500 டன் காங்கிரீட் கலவை ஊற்றப்பட்டு, அடித்தளம் அமைக்கப்பட்டது. இக்கோவில் 92 வயதான இந்திய சாது, பிரமுக் சுவாமியால் கட்டப்பட்டது. 2,000 டன் இத்தாலிய பளிங்கு மற்றும் 2,828 டன் பல்கேரிய சுண்ணாம்புக் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கோவில் சிற்பங்கள், 1,526 சிற்பிகளைக் கொண்ட குழுவினரால் செதுக்கப்பட்டிருக்கிறது.
காலம்
1992-ம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சுவாமிநாராயண் கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹார்லஸ்டன்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹீத்ரோ விமான நிலையம்