இரணியசித்தி பிள்ளையார் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி
இரணியசித்தி பிள்ளையார் திருக்கோயில், (பரிகார தலம்) இரணியசித்தி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603312.
இறைவன்
இறைவன்: பிள்ளையார்
அறிமுகம்
செய்யூர்- மதுராந்தகம் சாலையில் பவுஞ்சூர் அருகே 3 கி.மி. தூரத்தில் உள்ளது இக்கோயில். சிவாலய அமைப்பில் உள்ள இந்த ஆலயத்தில் பிரதானமாக ஸ்ரீ விநாயகர் எழுந்தருளி உள்ளார். பொன்வண்ண விநாயகர் என்ற திருநாமம். சன்னதியின் இருபுறமும் துவார பாலர்களைப்போல் விநாயகர் சிலைகள் இருக்கின்றன. ஸ்ரீ விநாயகரின் சன்னதி தெற்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் ஸ்ரீ வேத கிரீஸ்வரர், ஸ்ரீ ஞானாம்பிகை, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதிகள் இருக்கின்றன. எல்லா சன்னதிகளும் தென் திசை நோக்கி அமைந்துள்ளன. இந்த விநாயகர் ஒரு வரப்ரசாதி என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். தல விருட்சம் வில்வம். ஒரு கால பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு ராமலிங்க குருக்கள்-9380526141, திரு பாண்டியன்-9965520270 திரு செல்லப்பன்-96 26135805,
நம்பிக்கைகள்
, பரிகாரதலம்: இந்த விநாயகரை வணங்கி வந்தால் எம பயம் நீங்கும் . எல்லா வியாதிகளுக்கும் நிவாரணம் அளிக்கும் பரிகார தலமாகவும் விளங்குகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இரணியசித்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை