இடையார்பாக்கம் மகாதேவர் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
இடையார்பாக்கம் மகாதேவர் கோயில், இடையார்பாக்கம், ஸ்ரீபெரும்ப்பத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் -631 553.
இறைவன்
இறைவன்: மகாதேவர்
அறிமுகம்
சென்னையிலருந்து தக்கோலம் செல்லும் சாலையில் இடையார்பாக்கம் எனும் ஊரின் வெளிப்புறத்தே அமைந்துள்ளது தூங்கானை வடிவிலான இக்கோவில். சென்னை – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்னையிலிருயது 50 கி.மீ தொலைவில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து திருவள்ளூர் சாலையில் 28 கி.மீ தொலைவில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோவில் முதலாம் குலோத்துங்னால் கட்டப்பட்டது. கோவில் ஊரைவிட்டு சற்று தூரத்தில் உள்ளது. மேம்படுத்தபடாதா சாலைகள், மணற்குவியல்களும், பள்ளமும் தான் அதிகமுள்ளது. சிறிது தூரம் பயணம் ஆனதும் இடதுபுறமாக தமிழ்நாடு தொல்லியல் துறையில் சார்பில் போடப்பட்ட கான்கிரெட் சாலை கோவிலின் இருப்பிடத்தை கொண்டு சேர்க்கும் வகையில் அமைதிருகின்றனர். ஒர் அழகான ஏரிக்கரையின் மீது கட்டப்பட்ட கோவில். இக்கோவில் தூங்கானை மாட வடிவத்தில் கோபுரமின்றி காட்சியளிக்கிறது. கோவில் போதிய பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. கோவில் குளத்தின் படித்துறைகள் சிதிலமடைந்துள்ளன. கோவிலுக்கு செல்லும் பாதையில் கருவேலஞ்செடிகள் புதர்மண்டி காட்சியளிக்கிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது.
புராண முக்கியத்துவம்
இக்கோயில் முதல் குலோதுங்கன் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டுமெனக் கல்வெட்டுகளாலும், கட்டடக்கலை பாணியாலும் அறிய முடிகிறது. இக்கோயில் சந்திரசேகரன் ரவி என்ற சோழேந்திர சிம்ம ஆசாரி என்ற சிற்பியினால் கட்டப்பட்டது என்ற செய்தியை கல்வெட்டால் அறிகிறோம். இறைவன் திருப்பாத காடுடையார் என அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் இவ்வூர் இடையாற்றுப்பாக்கம் எனவும் ராஜ வித்யாதர சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்படுகிறது. இவ்வூர் ஜெயங்கொணட சோழமண்டலத்தில் மணவிற் கோட்டத்து புரிசை நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இது கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் கூடிய இக்கோயில் விமானம் இருதள அமைப்புடையது. கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வச் சிலைகள் சோழர் கால கலைப்பாணியில் காட்சி தருகின்றன
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இடையார்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை