இடையாத்தி சிவன் கோவில், தஞ்சாவூர்
முகவரி
இடையாத்தி சிவன் கோவில், இடையாத்தி, பேராவூரணி தாலூகா, தஞ்சாவூர் மாவட்டம் – 614628.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கறம்பக்குடி பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள சிறு கிராமம் தான் இடையாத்தி. வயல் வெளியின் ஓரம் பழமையான சிவாலயம் ஒன்று தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு உள்ளது. விமானம் அல்லாத கற்றளியாக இருந்திருந்த கோவில் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுவது வேதனையிலும் வேதனை.. சிவபெருமான் லிங்க ரூபத்தில் சதுர ஆவுடையார் அமைப்புடன் அருள்பாலிக்கிறார். ஆவுடையாரின் பாதி பாகம் மண்ணில் புதைந்துள்ளது. நந்தியம்பெருமான் சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளது. அம்பாள் சிலை ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். ஒரு நேர பூஜை நடப்பதாக தெரிகிறது. கூடிய விரைவில் கோவிலின் பழமை மாறாமல் திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு காண வேண்டும் என அ(சி)வனையே வேண்டுவோம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இடையாத்தி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி