ஆலம்பாக்கம் கைலாசநாதர் சிவன்கோயில், திருச்சி
முகவரி
ஆலம்பாக்கம் கைலாசநாதர் சிவன்கோயில், ஆலம்பாக்கம், திருச்சி மாவட்டம் – 621711
இறைவன்
இறைவன்: கைலாசநாதர்
அறிமுகம்
ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஆலம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி-திருமழபாடி சாலையில் லால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. . 10-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த முதலாம் பராந்தகன் காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலில் கருவறை விமானத்தின் தளப்பகுதி காணப்படவில்லை. தாங்குதளத்திலிருந்து கூரைப்பகுதி வரை கற்றளியாக அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கோட்டங்களில் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை. எளிய கட்டிட அமைப்பாக இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறைச் சுற்றில் உள்ள சுவர்ப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
புராண முக்கியத்துவம்
இக்கோயிலின் மூலஸ்தானம் சிவலிங்கம் ஆவுடையார் வடிவில் உள்ளது. இக்கோயில் சுற்றுப்பிராகாரத்தில் முதலாம் பராந்தகன் காலத்து கல்வெட்டுகள் உள்ளது. இக்கோயில் கருவறை கட்டடஅமைப்பு பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டுள்ளதுகல்வெட்டுகளில் இக்கோயில் “அமரேஸ்வரப் பெருமான்” கோவில் என்றும், இவ்வூரை “நந்திவர்ம மங்கலம்” என்றும் குறிப்பிடப்படுகிறது.மேலும் இரண்டாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் இவ்வூரில் உள்ள சிவப்பிராமணர்கள் இக்கோயிலின் கருவூலத்திலிருந்து சிறிது தொகையினைக் கடனாகப் பெற்று அத்தொகையின் வட்டிக்கு இக்கோயிலில் விளக்கெரிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளர் என்பதைக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலம்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி