ஆண்டியூர் விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆண்டியூர் விஸ்வநாதர் சிவன்கோயில்
ஆண்டியூர், திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம் – 610107.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி.
அறிமுகம்:
திருவாருரின் தெற்கில் செல்லும் திருத்துறைபூண்டி சாலையில் பத்து கிமீ தூரம் வந்தால் திருநெய்பேர் உள்ளது இங்கிருந்து தென்மேற்கில் செல்லும் சிறிய தெருவில் ½ கிமி தூரம் சென்றால் ஆண்டியூர் அடையலாம். சிறிய கிழக்கு நோக்கியகோயில் நான்குபுறமும் மதில்சுவருடன் சிறிய நுழைவாயிலுடன் உள்ளது கோயில். முற்றிலும் செங்கல் கொண்டு கட்டப்பட்ட கோயிலாகும். இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி.
இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும் இறைவி தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளார். இறைவன் முன்னர் சிறிய மண்டபம் நீண்டு உள்ளது.அதில் நந்தி உள்ளது. கருவறை கோட்டமாக தென்முகன் துர்க்கை உள்ளனர். சிற்றாலயங்களாக விநாயகர் தனி முருகன் மகாலட்சுமி மற்றும் வாயு லிங்கம் உள்ளது. வாயு பகவன் இத்தலத்தில் லிங்க வழிபாடு செய்த மூர்த்தியானவர் இவர் எனப்படுகிறது. சண்டேசர் வழமையான இடத்திலும், வடகிழக்கில் நவகிரகங்கள், சற்று பெரிய அளவில் சூரியனும் அடுத்து காலபைரவர் சன்னதியும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் பழமையான கோயிலின், கருங்கல்லால் செய்யப்பட்ட அழகிய விமான கலசங்கள் கிடக்கின்றன. அருகில் ஓர் உடைந்த கஜலட்சுமியும் உள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆண்டியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி