அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆவணியாபுரம் – சிம்மராசிக்காரர்களுக்குரிய தலம்
அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆவணியாபுரம்
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஆவணியாபுரம், திருவண்ணாமலை
அத்திரி முனிவர் – அனுசூயா தம்பதிகளின் புத்திரர் ஏரண்டர். அவர் காகபுஜண்டரின் சீடர். #ஈசனை தேடி குழு பதிவு# இம்முனிவர் சிவனை வேண்டி தவம் செய்வதற்கு தகுந்த இடம் தேடி அலைந்தார். ஓரிடத்தில் சிம்மம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் ஒரு மலையையும், அதையொட்டிய வனப்பகுதியையும் கண்டார். அதுவே சரியான இடம் என்றுணர்ந்த முனிவர் அங்கேயே கடுந்தவம் புரிந்தார். முனிவரின் தவத்தில் மகிழ்ச்சியுற்ற இறைவன் அவருக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். அந்த இடமே முற்காலத்தில் சிம்மபுரம் என்றழைக்கப்பட்டு, தற்போது ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஏரண்ட முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு, சிம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் வீற்றிருந்த அந்த ஆலயம் நாளடைவில் சிதிலமடைந்து மண்ணோடு மறைந்து போனது. பிற்காலத்தில் ஆதிசங்கர பகவத்பாதர் பாரத நாடு முழுவதும் புண்ணிய யாத்திரை #ஈசனை தேடி குழு பதிவு# மேற்கொண்டபோது இப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது அவருடைய கனவில் ஏரண்ட முனிவர் தோன்றி, தான் சிம்மபுரீஸ்வரரை பிரதிஷ்டை செய்த விவரத்தை உணர்த்தியதாகவும், சங்கரரும் மண்ணில் புதையுண்டு போன அந்த லிங்கத்தை கண்டெடுத்து தமது திருக்கரங்களாலேயே திரும்பப் பிரதிஷ்டை செய்ததாகவும் செவி வழிச் செய்தி ஒன்று கூறுகிறது. ஆதிசங்கரர் பூஜித்து வழிபட்ட அந்த ஈசனுக்கு அவணீ ஸ்வரர் என்று பெயர் சூட்டி, ஆலயம் எழுப்பி வழிபாட்டினை தொடர்ந்து வந்துள்ளனர்.
கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. ஆவுடையார் மேல் அமைந்துள்ள பாணம் மரகதத் திருமேனி என்பது சிறப்பு. தெற்கு நோக்கி அம்பாள் சன்னிதி உள்ளது. மங்களாம்பிகை என்ற திருப்பெயருடன் அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள் #ஈசனை தேடி குழு பதிவு# பாலிக்கிறார். இறைவன் சன்னிதிக்கு முன் நந்தீஸ்வரர் அழகிய வடிவத்துடன் காட்சியளிக்கிறார். மேலும் பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கும் ஆறுமுகக் கடவுள் மிக அழகாக உள்ளது. இக்கடவுள் பெருமாள் அம்சம் கொண்டது. கையில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாது.
கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. ஆவுடையார் மேல் மரகதத் திருமேனி அமைந்துள்ளது.
இது சிம்மராசிக்காரர்களுக்குரிய தலமாகக் கருதப்படுகிறது.
வியாபார விருத்தி, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற தடைகளை நிவர்த்தி செய்யும் தலமாகவும் திகழ்கிறது