அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்
முகவரி
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி, ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் – 637505.
இறைவன்
இறைவன்: பாலசுப்ரமணியசுவாமி
அறிமுகம்
பால சுப்ரமணிய கோயில் என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே உள்ள அலவாய்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த முருகன் கோவில் 1500 படிகள் கொண்ட மலை உச்சியில் அமைந்துள்ளது. அலவாய்மலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும்.
புராண முக்கியத்துவம்
ஒருகாலத்தில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து மருகிய பக்தர் ஒருவர் பழநி முருகனை தரிசிக்க சென்றார். பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, அலவாய் மலையைக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் அங்கு எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுக்கும் படியும் கூறியதோடு, இந்தப் பணி முடியும் வேளையில், உனக்கு குழந்தைப் பிறக்கும் என்று அருளினாராம். அதன்படி, அந்தப் பக்தர் இத்தலம் வந்து கந்தனைத் தரிசித்து, அன்பர்களின் வசதிக்காக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தார். அந்தப் திருப்பணி முடிவுறும் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் சொல்வர்.
நம்பிக்கைகள்
கார்த்திகை சோம வாரத்தில் வேலவனை வேண்டினால், குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூப்படைவதில் சிக்கல் உள்ள பெண்களும், கர்ப்பப்பை கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்களும் இங்குள்ள சுனைநீரை பருகினால் குணமாகும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
முருகப்பெருமான் கந்தசஷ்டி தினத்தில் சூரனை வதம் செய்து ஆட்கொண்டார். முருகனின் அருள்பெற்ற சூரபத்மன் தெற்கு திசையில் இருப்பதாக ஐதீகம். அவனுக்கு அருள்பாலிக்கும் விதமாக ஆஞ்சநேயர், இந்த மலையில் தெற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சனி தோஷங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை!
திருவிழாக்கள்
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராசிபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேலம், ராசிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்