அருள்மிகு ருத்ராக்ஷபுரீஸ்வரர் திருக்கோயில்
முகவரி
அருள்மிகு ருத்ராக்ஷபுரீஸ்வரர் திருக்கோயில், மயானூர், கரூர் மாவட்டம் – 639108
இறைவன்
இறைவன்: ருத்ராக்ஷபுரீஸ்வரர்
அறிமுகம்
காவிரிக் கரையில், மாயனூரில் [கரூர் மாவட்டம்] இருக்கும் இந்த ருத்ராக்ஷபுரீஸ்வர கோவில், செடி-கொடிகள் சூழ்ந்து செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் மறைந்திருந்தது. இதன் அருகில் பெருமாள் கோயில் உள்ளது. ஆனால் பெருமாள் கோவிலை விட பரந்த இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது இக்கோவில். கோவிலுக்குள் இருக்கும் லிங்கத்தைக் காணோம். ஆவுடையார் சிறிது தூரத்தில் கிடக்கிறது. மற்ற விக்கிரங்களைக் காணோம். மாலிக்காபூர் அல்லது ஔரங்கசீப் வந்து இடித்து விட்டு சென்ற நிலையில் அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. பக்கத்தில் பெரிய குளம் காணப்படுகிறது. அதை வைத்து கணக்கிட்டால், மிகப் பெரிய கோவில் வளாகம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சுற்றுச்சுவர் இருந்திருப்பதற்கு அடையாளம் காளப்படுகிறது, ஆனால், சுவரைக் காணோம். மூலவர்-கர்ப்பகிருகத்திற்கும், மண்டபத்திற்கும் அளவுக்கு அதிகமாகவே இடைவெளி காணப் படுகிறது. கர்ப்பகிரகம், தூண்கள் கொண்ட மண்டபம், சிறிய மண்டபம் மற்றும் தூண்கள் கொண்ட மண்டபம், சுற்றிலும் கிடக்கின்ற பகுதிகள், பாகங்களும் இறைந்து கிடக்கின்றன. இவை எல்லாமே ஒரே கோட்டில் அமைந்துள்ளன. எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது என்பதும் முன்னமே சுட்டிக்காட்டப்பட்டது. இதைச் சுற்றி நிலம் அதிகமாக இருப்பது, இக்கோவில் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் அல்லது கோவில் வளாகம் பெரிதாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒருவேளை பக்கத்தில் இருந்த மற்ற சன்னதிகள் இடிக்கபட்டிருக்கலாம், அல்லது அத்தகைய நிலையில் இருந்த பாகங்கள் அப்புறப்படுத்தப் பட்டிருக்கலாம். மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விலையுயர்ந்த அல்லது மற்ற முக்கியமான பொருட்கள் எதுவுமே காணப்படாமல் இருக்கின்றன. கோபுரத்தி மீது கலசம் காணப்படவில்லை. இதனால் நிச்சயமாக விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுத்துச்செல்லப்பட்டன என்று யூகிக்கப்படுகிறது. ஹைஹர் அலி-திப்பு சுல்தான் படையெடுத்து வந்தபோது, இக்கோவில்கள் இடிக்கப்பட்டு இருக்கலாம். அருகில் ஶ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதரீருப்பதால், ஒருவேளை துருக்கர் படைகள் இக்கோவில்களை தாக்கி அழித்த்திருக்கலாம். இருப்பினும், கோவில்கள் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்டு வந்திருப்பதனால், மறுபடியும் அவை, தாக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதனால் அத்தகைய அழிவை யார் ஏற்படுத்தினர் என்ற கேள்வியும் எழுகிறது.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ரெங்கநாதபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி