அருள்மிகு ராஜேந்திர சோளீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி
முகவரி
அருள்மிகு ராஜேந்திர சோளீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி, சிவகங்கை – 630561.
இறைவன்
இறைவன்: சோழீசுவரர்
அறிமுகம்
மதுரை-இராமநாதபுரம் சாலையில், பரமக்குடியை அடுத்து காரைக்குடி சாலையில், எமனேஸ்வரம், குமாரக்குறிச்சி, திருவுடையார்புரம் ஆகிய ஊர்களை அடுத்து இளையான்குடி அமைந்துள்ளது. அப்பகுதியில் இக்கோயில் உள்ளது. இத்தலம் இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மாறநாயனாருக்குச் சன்னதி உள்ளது. இக்கோயிலில் அவர் ’பசிப்பிணி மருத்துவர்’ என்று வழங்கப்படுகிறார். கோயிலுக்குச் சற்று தூரத்தில் இவர் வாழ்ந்த வீடும் பயிர் செய்த நிலமும் அமைந்துள்ளன. இவர் பயிர் செய்த நிலத்தை “முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்” என்றழைக்கப்படுகின்றனர். இவரது குருபூஜை நாளன்று இத்தலத்து இறைவனாருக்கு தண்டுக்கீரை படைக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
நாயனார் வரலாற்றுத் தொடர்பான பெரிய புராணப் பாடல்கள் சுவரில் கல்வெட்டுகளாகப் பதிக்கப்பட்ட மகாகணபதி, வேங்கடேசர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், பைரவர், சனீஸ்வரன், சந்திரன் சன்னதி அடுத்தடுத்துள்ளன. சண்டேசுவர் எதிரில் யானையன்று சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் கருவறை மண்டபத்தில் செதுக்கப்பட்டு உள்ளது.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இளையான்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி