அருள்மிகு முருதேஸ்வரர் திருக்கோயில், கர்நாடகா
முகவரி
அருள்மிகு முருதேஸ்வரர் திருக்கோயில், பட்கல், உத்தர கன்னட மாவட்டம் கர்நாடகா – 581350
இறைவன்
இறைவன்: முருதேஸ்வரர்
அறிமுகம்
முருதேஸ்வரர் என்பது கருநாடகத்தின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும், இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது, முருதேஸ்வரர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். இந்நகரத்தில் உள்ள முருதீசவரன் கோவில் புகழ்பெற்றது. இக்கோயிலில் தான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவபெருமானின் சிலை அமைந்துள்ளது. இந்த 123 அடி உயரமான சிலையை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.முருதேஸ்வரர் கோயிலில் மூலவரின் சிலை மட்டுமில்லாது கோபுரமும் மிகப்பெரியதே. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் கோபுரத்தை போன்றே மிகவும் உயரமானதாகும். 20 அடுக்கு கோபுரமான இதன் மேல் சென்று முருதேஸ்வரரின் மொத்த ரூபத்தையும் காணும் வகையில் லிப்ட் ஏற்பாடுகள் இங்கே செய்யப்பட்டுள்ளன.
புராண முக்கியத்துவம்
முருதேஸ்வரர் கோயில் அமைந்ததின் பின்னணியில் இராமாயண காலத்தில் நடந்த சுவாரஸ்யமான புராண வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது இறவா நிலையை அருளும் ஆத்மலிங்கத்தை வணங்கி தேவர்களும் கடவுளர்களும் இறப்பே இல்லாத நிலையை பெற்றனர். இது கேள்வியுற்று தானும் அந்நிலையை அடைய பேராவல் கொண்டான் பெரும் சிவபக்தனும் இலங்கையின் மன்னனுமான ராவணன். ஆத்மலிங்கத்தை அடைய சிவனை நோக்கி பெருந்தவம் மேற்கொண்டான் ராவணன். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வேண்டிய வரம் கேட்குமாறு ராவணனிடம் சொன்னார். ராவணனும் சிவபெருமானிடம் ஆத்மலிங்கத்தை கேட்டுப்பெற்றான். ஆனால் இதை கீழே வைத்தல் திரும்பவும் எடுக்க முடியாது என்ற ஒரே நிபந்தனையுடன் சிவபெருமான் அவ்வரத்தை வழங்கினார். ஒருவேளை ராவணன் ஆத்மலிங்கத்தை வழிபட்டு இறப்பை வென்றுவிட்டான் என்றால் அகில உலகத்தையும் அழித்துவிடுவான் என்று பயந்த தேவமுனி நாரதர் விநாயகரிடம் சென்று இதுபற்றி முறையிடுகிறார். விநாயகரும் ராவணன் ஆத்மலிங்கத்தை வழிபடாத வண்ணம் சூழ்ச்சி ஒன்றை செய்கிறார். ராவணனுக்கு தினமும் மாலை சிவபெருமானுக்கு பூசை செய்வதை வழக்கமாக கொண்டவன். ஆத்மலிங்கத்துடன் கோகர்னாவை கடக்கும் வேளையில் விஷ்ணு பகவான் சூரியனை மறையும்படி செய்துவிடுகிறார். அந்நேரத்தில் லிங்கத்தை கையில் வைத்துக்கொண்டு எப்படி சிவபெருமானுக்கு பூசை செய்வது என்று ராவணன் குழம்பிய நேரத்தில் அந்தணராக மாறுவேடமிட்டு செல்கிறார் விநாயகர். அந்தணரான விநாயகர் தான் ஆத்மலிங்கத்தை கையில் வைத்துக்கொள்வதாகவும் அந்நேரத்தில் ராவணன் சிவ பூஜை மேற்கொள்ளலாம் என்றும் சொல்கிறார். ஒருவேளை தான் மூன்று முறை அழைத்தும் ராவணன் செவிமடுக்கவில்லை என்றால் தான் லிங்கத்தை கீழே வைத்துவிடுவேன் என்றும் சொல்கிறார் அந்தண வேடத்தில் வந்த விநாயகர். சிவ பூசைக்காக ராவணன் சென்றவுடனேயே விநாயகர் லிங்கத்தை கீழே வைத்துவிடுகிறார். விஷ்ணுவும் சூரியன் மறந்தது போன்ற மாயத்தோற்றத்தை விளக்கிவிடுகிறார். தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்றுணர்ந்த ராவணன் தன்னுடைய பெரும்பலத்தை கொண்டு ஆத்மலிங்கத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறான். என்ன முயற்சி செய்தும் ஆத்மலிங்கத்தை எடுக்கமுடியாமல் போகிறது. எனினும் ஆத்மலிங்கத்தின் சில பகுதிகள் மட்டும் உடைந்து சில இடங்களில் பரவி விழுகின்றன. அப்படி விழுந்த ஒரு லிங்கத்தின் கோயில் தான் முருதேஸ்வரர் கோயில் என்று சொல்லப்படுகிறது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.
நம்பிக்கைகள்
இந்த கோவிலுக்கு குழந்தை பாக்கியம், சிறந்த கல்வி, திருமணம் நடக்க, போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு அமர்த்தி “சர்வதேவ பூஜை” என்ற சக்திவாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது. இப்பூஜையின் போது நைவேத்தியமாக “எள், நெய், வெல்லம், பச்சை பயறு, ஏலக்காய்பொடி கலந்த “கஜ்ஜாய பிரசாதம்” படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு “ருத்ர அபிஷேகம்” செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
இக்கோயிலில் தான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவபெருமானின் சிலை அமைந்துள்ளது. இந்த 123 அடி உயரமான சிலையை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. முருதேஸ்வரர் கோயிலில் மூலவரின் சிலை மட்டுமில்லாது கோபுரமும் மிகப்பெரியதே. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் கோபுரத்தை போன்றே மிகவும் உயரமானதாகும். 20 அடுக்கு கோபுரமான இதன் மேல் சென்று முருதேஸ்வரரின் மொத்த ரூபத்தையும் காணும் வகையில் லிப்ட் ஏற்பாடுகள் இங்கே செய்யப்பட்டுள்ளன. இந்த கோயில் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டதாகும். இது கந்துக்கா என்ற சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.இங்கிருக்கும் ராஜகோபுரம் 237அடி உயரமானதாகும். இப்போதிருக்கும் இந்த மிகப்பெரிய சிவபெருமானின் சிலைக்கு கீழே இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ மிர்தேஷ லிங்கம் என்ற ஆத்மலிங்கம் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த சந்நிதியினுள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
திருவிழாக்கள்
மகாசிவராத்திரி, பிரதோஷம்,
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முருதேஸ்வரர் நிலையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
முருதேஸ்வரர் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்