அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், (பரிகார தலம்) சூணாம்பேடு, சித்தாமூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401.
இறைவன்
இறைவி: முத்தாலம்மன்
அறிமுகம்
சென்னை பாண்டி ECR சாலையில் உள்ள சூணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்தாலம்மன் ஆலயம். கற்கோயிலாக விளங்கும் இந்த ஆலயம் சுமார் 1000 வருடங்களுக்கு முற்பட்டதாக சொல்லப்படுகிறது. தினசரி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. வருடம் தோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை இங்கு விசேஷம். அதோடு ஆடி பூரம் அன்று 1000 குடம் பால் அபிஷேகம் அம்பாளுக்கு நடைபெறுகிறது. ஆலய நேரம் காலை 7 முதல் 11 வரை, மாலை 5 முதல் 7.30 வரை. சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய ஊர்களிலிருந்து இங்கு பேருந்துகள் வருகின்றன. தொடர்புக்கு திரு கஸ்தூரி பூசாரி- 9444034907.
நம்பிக்கைகள்
பரிகார தலம்: குழந்தை பாக்கியம் வேண்டுவோர் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் இங்கு வந்து ராகுகால நேரத்தில் அம்பாளுக்கு எலும்பிச்சைபழ விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் புத்திரபாக்கியம் ஏற்படும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சூணாம்பேடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை