அருள்மிகு முக்திநாத் சக்திப்பீடத் திருக்கோயில், நேபாளம்
முகவரி
அருள்மிகு முக்திநாத் சக்திபீடத் திருக்கோயில், மஸ்டாங் மாவட்டம், தவளகிரி மண்டலம்த் – 33100, நேபாளம்
இறைவன்
சக்தி: கண்டகி சண்டி பைரவர்: சக்ரபாணி, உடல் பகுதி அல்லது ஆபரணம்: நெற்றி
அறிமுகம்
முக்திநாத் நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும். முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதுகின்றனர். முக்திநாத்தில் சக்தி தேவியை “கண்டகி சாண்டி” என்றும், பைரவரை “சக்ரபாணி” என்றும் அழைக்கிறார்கள். சதி தேவியின் நெற்றிப்பகுதி இங்கே விழுந்ததாக நம்பப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் நெற்றிப்பகுதி இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கைகள்
கண்டகி நதியில் குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களைக் போக்கி மோட்ச்சத்தை அடைவார்கள் என்று கூறப்படுகிறது, ஏனெனில் விஷ்ணு கோயிலைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் புனிதமான சாலகிராம கற்கள் கண்டகி ஆற்றில் உள்ளன. ஒரு நபரின் ஏதேனும் நிறைவேறாத ஆசை அல்லது விருப்பம் இருந்தால், அவர்கள் தேவியை பக்தியுடன் வணங்கினால் அது நிறைவேறிவிடும். முக்திநாத் உலகளவில் பிரபலமான 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முக்திநாத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ரக்சால்
அருகிலுள்ள விமான நிலையம்
ஜோம்ஸம்