அருள்மிகு பருத்தியப்பர் திருக்கோயில், பரிதிநியமம்
முகவரி
அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில், பருத்தியப்பர் கோயில், மேலவுளூர் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் PIN – 614904 PH:04374-256910
இறைவன்
இறைவன்: பரிதியப்பர், பாஸ்கரேசுவரர், இறைவி: மங்களம்பிகை
அறிமுகம்
பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 101ஆவது சிவத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல், அவரை நிந்தனை செய்து தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டதால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டான். இத்தலத்தில் தான் சூரியனுக்கு ஏற்பட்ட தோஷம் விலகியது. மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம் சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார்.
நம்பிக்கைகள்
கிழக்கு நோக்கியுள்ள இந்த ஆலயம் இரண்டு கோபுரங்களுடன் விளங்குகிறது. இராஜகோபுரம் 5 நிலைகளையும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும் நேரே கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வசந்த மண்டபத்திற்குப் பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உட்பிரகாரம் அடைந்தால், அங்கு விநாயகர், முருகன், கஜலட்சுமி சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராச சபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.
சிறப்பு அம்சங்கள்
இத்தலத்தில் சூரியன் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.
திருவிழாக்கள்
பங்குனி மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படுகின்றன.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
இந்துசமயஅறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரிதிநியமம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி