அருள்மிகு நயனவரதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு நயனவரதேஸ்வரர் திருக்கோயில், கண்கொடுத்த வனிதம், திருவாரூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: நயனவரதேஸ்வரர் இறைவி: வேதநாயகி
அறிமுகம்
நயனவரதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்த வனிதம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இறைவனை நாயனவரதேஸ்வரர் என்றும், இறைவியை வேத நாயகி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழங்கால கோயில் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கோவிலில் நுழைவாயிலில் ஐந்து அடுக்கு இராஜகோபுரமும், அடுத்த நுழைவாயிலில் 3 அடுக்கு இராஜகோபுரமும் உள்ளன, ஆனால் இரண்டும் பாழடைந்த நிலையில் உள்ளன.
புராண முக்கியத்துவம்
பார்வையற்ற ஒரு பெண் குழந்தையின் தாய் வேண்டுகோளுக்கிணங்கி .இறைவன் அக்குழந்தைக்கு கண்ணொளி வழங்குகிறார், இதனால் இங்கு இறைவன் பெயர் நயனவரதேஸ்வரர் அதாவது கண் கொடுத்தவர் என பெயர். சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகப்பெரிதாய் இருந்துள்ளது அப்போது எட்டு திக்கிலும் சிவாலயங்கள் இருந்துள்ளன. அவை அஷ்ட திக்கு கோயில்கள் என அழைக்கப்பட்டன. அவற்றில் ஈசான்ய திக்கு சிவலிங்கம் மட்டும் கிடைத்து ஊர் மக்கள் அதற்க்கு ஓர் சிறிய ஒற்றை கருவறை கோயில் ஒன்றை எழுப்பியுள்ளனர்.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கண்கொடுத்த வனிதம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி