அருள்மிகு திருவனந்தீஸ்வரமுடையார் திருக்கோயில், மேலக்கிடாரம்
முகவரி
அருள்மிகு திருவனந்தீஸ்வரமுடையார் திருக்கோயில், மேலக்கிடாரம் (மேலக்கடாரம்), இராமநாதபுரம் மாவட்டம் – 623528.
இறைவன்
இறைவன்: திருவனந்தீஸ்வரமுடையார் இறைவி : சிவகாமி அம்மன்
அறிமுகம்
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியிலிருந்து 10 கிமீ தொலைவில் மேலக்கிடாரம் கிராமம் உள்ளது. சமணர்கள் காலத்தில் இந்த கிராமம் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. இங்கு தொன்மையான திருவனந்தீஸ்வரமுடையார் என அழைக்கப்படும் சிவன் கோயில் உள்ளது. மூலவராக திருவனந்தீஸ்வரமுடையார் உள்ளார். சிவகாமி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலுக்கு கொடிமரம் கிடையாது. கோயில் வளாகத்தில் சமணர்கள் கால அடையாள சின்னங்கள் உள்ளன. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.பி 1236-ல் கட்டுவித்த திருநாகேசுவரர் கோவில், இந்துசமய அறநிலையத்துறை அலட்சியத்தால், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, சிதிலமடைந்து அழிவின் விளிம்பில் உள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கோயிலை கட்டியதற்கான ஆதாரங்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் உள்ளன. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்கள் இந்த கோயிலை புனரமைத்து, பராமரித்து வந்தனர். நாளடைவில் உரிய பராமரிப்பில்லாததால் மண்ணோடு, மண்ணாக இந்த கோயில் புதைந்தது. தற்போது அங்குள்ள மக்களால் சுத்தம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது..
புராண முக்கியத்துவம்
பண்டைய காலத்தில் முதலாம் ராஜேந்திரசோழன் வென்ற நாடுகளில் ‘மேலக்கிடாரம்’ பகுதியும் ஒன்றாகும். இதனால் ‘கிடாரம்கொண்டான்’ என மன்னனுக்கு பெயர் ஏற்பட்டது. ‘கிடாரம்கொண்டான்’ என்ற இந்த ஊரின் பெயர் மருவி காலப்போக்கில் ‘மேலக்கிடாரம்’ என அழைக்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஊரில் சோழ மன்னர்களின் குலதெய்வமான திருவனந்தீஸ்வரமுடையாருக்கு கோயில் உள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கோயிலை கட்டியதற்கான ஆதாரங்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் உள்ளன. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்கள் இந்த கோயிலை புனரமைத்து, பராமரித்து வந்தனர். நாளடைவில் உரிய பராமரிப்பில்லாததால் மண்ணோடு, மண்ணாக இந்த கோயில் புதைந்தது. அனந்தீஸ்வரர் என்பது பாம்புகளின் தலைவனான ஆதிசேஷனின் மறுபெயர். அதனால் இந்த கோயில் கேது தலப்பெருமை கொண்டதாக உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் சிவலிங்கத்தின் தலைக்கு மேல் 5 தலை நாகம் படையெடுத்த நிலையில் இருக்கும். இங்குள்ள அனந்தீஸ்வரமுடையார் தலையில் 7 தலை நாகம் உள்ளது. சிவன் கோயில்களில் மூலவர் சன்னதி முன்புள்ள நந்தியின் கழுத்து சற்று சாய்ந்த நிலையில் இருக்கும். இங்கு மூலவராக உள்ள அனந்தீஸ்வரமுடையாரை நந்திபகவான் நேராக பார்ப்பதும், 6 முனை கொண்ட சூலாயுதம் இருப்பதும் கோயிலின் தனிச்சிறப்புகளாகும். மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று காலை சூரியனின் ஒளிக்கற்றை கருவறையிலுள்ள மூலவர் மீது படுவது தனிச்சிறப்பாகும். இங்குள்ள நந்தி சிலைக்கு கீழ் 2 சித்தர்களின் ஜீவசமாதி உள்ளதாக கூறப்படுகிறது.
நம்பிக்கைகள்
கேது தலம் என்பதால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. நாகதோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வணங்கினால் தோஷம் நிவர்த்தியாகும் என்று பக்தர்களால் பெரிதும் நம்பப்படுகிறது. ராமாயண காலத்தில் போர் துவங்குவதற்கு முன்பு வாலியும், சுக்கீரனும் இங்குள்ள மூலவரை வணங்கியுள்ளனர். இதற்கு ஆதாரமாக அனுமன் கால் பதிந்த இடத்தில், பாறையில் செதுக்கப்பட்ட குரங்கு வடிவ சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலக்கிடாரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இராமநாதபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி