அருள்மிகு திருலோகநாதசுவாமி திருக்கோவில், தக்களூர்
முகவரி
அருள்மிகு திருலோகநாதசுவாமி திருக்கோவில் தக்களூர் திருநள்ளாறு அஞ்சல் காரைக்கால் வட்டம் புதுச்சேரி மாவட்டம் PIN – 609607
இறைவன்
இறைவன்: திருலோகநாதசுவாமி, இறைவி: தர்மசம்வர்த்தினி
அறிமுகம்
இத்தலம் புதுவை மாநிலத்தில் உள்ளது. மயிலாடுதுறை – (வழி) பேரளம் – காரைக்கால் சாலையில், திருநள்ளாறு தாண்டி, 1 கி.மீ.-ல் சாலையோரத்தில் Television Relay Centre உள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம். பாதையோரத்திலேயே கோயில் உள்ளது. மிக பழமையான சிறிய கோயில். போதிய பராமரிப்பு இல்லை. கோயில் முழுவதும் சிதிலமாகியுள்ளது. கருவறையில் செடிகள் முளைத்துள்ளன. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் காணப்படுகிறது. இறைவன் திருலோகநாதசுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கியும் அருட்காட்சி தருகின்றனர். இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். இதன் பக்கத்தில் உள்ள பாடல் பெற்ற தலம் தருமபுரம். அப்பர் பாடலில் இவ்விரு பெயர்களும் இணைந்து வருகின்றன. “தருமபரத்துள்ளார் தக்களூரார்.” அப்பரும், சுந்தரரும் இவ்வூரைக் குறிப்பிட்டு உள்ளனர்.
சிறப்பு அம்சங்கள்
ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் காணப்படுகிறது. முகப்பு வாயில் கடந்து உள் சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிராகாரம். காணலாம். இதில் நநதி, பலிபீடம் உள்ளன. கொடிமரம் இல்லை. இவற்றைக் கடந்து அடுத்துள்ள உள் வாயில் வழியே சென்று இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருலோகநாதசுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கியும் அருட்காட்சி தருகின்றனர். ஆலயம் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தக்களூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி