அருள்மிகு தான்தோன்றி விநாயகர் திருக்கோயில், திருத்தனி
முகவரி
அருள்மிகு தான்தோன்றி விநாயகர் திருக்கோயில், கஸ்தூரிபாய் தெரு, கே.கே.நகர், திருத்தனி மலை – 631 209 திருவள்ளுர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: தான்தோன்றி விநாயகர்
அறிமுகம்
திருத்தணி மலை மீது சென்று, கோயிலை வெளிச்சுற்றில் மலையில் வலம் வரும் போது, கோயிலின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படிகளின் வழியே இறங்கியதும் இடப்பால் குளம் ஒன்று உள்ளது. அதன் வழியே சென்றால் இக்கோவிலை அடையலாம். இக்கோயில் முழுவதும் சிதிலடைந்து உள்ளது. இக்கோவிலின் கருவறைக்குள் விநாயகர் சிலை இல்லை. கருவறை முழுவதும் மாடுகளின் சாணம் காணப்படுகிறது. கோவிலின் பின்புறம் சிறிய குளம் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது குளம் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமின்றி காணப்படுகிறது. அங்கு நாக இராஜ சிலையும், சிலைக்கு நடுவே சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலிக்கு அர்த்த மண்டபமும், சகா மண்டபும் இருந்திருக்கக்கூடும். தற்போது ஏதுமில்லாமல், அதற்க்கு மேல் செடிகளும், அதில் செதுக்கப்பட்டுள்ள சிலைகள் அனத்தும் அழிந்துள்ளது. அனைத்து இடங்களிலுல் செடிகளும் புட்களும் காணப்படுகிறது. கோயிலில் மூர்த்தங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் ஏதுமில்லாமல் அனைத்தும் களவாடப்பட்டுள்ளன.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருத்தனி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருத்தனி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை