Saturday Jan 18, 2025

அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்

முகவரி

அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர் வடபாதிமங்கலம் அஞ்சல் திருவாரூர் மாவட்டம் PIN – 610206 PH:04367-237692

இறைவன்

இறைவன்: ஜகதீஸ்வரர் இறைவி: ஜெகன் நாயகி

அறிமுகம்

ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும்.அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும்.

புராண முக்கியத்துவம்

ஓகை;சோழநாட்டின் தலைநகராகவும் திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும்;

நம்பிக்கைகள்

இக்கோவில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், அமைந்துள்ளது. மூலவர் ஜகதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன், சந்நிதிகளும் உள்ளன. இத்தலத்திலுள்ள நடராஜர் மிகவும் அழகானதோர் உருவத்துடன் காட்சி தருகிறார்.

சிறப்பு அம்சங்கள்

பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன.

திருவிழாக்கள்

நவராத்திரி,சிவராத்திரி,தை அமாவாசை,பௌர்ணமி

காலம்

10ஆம்நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஓகைப்பேரையூர்.

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top