அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில்
முகவரி
அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில், பானம்பாக்கம், திருவள்ளூர் – 631402
இறைவன்
இறைவன்: சோளீசுவரர், கைலாச நாதர் இறைவி: திரிபுரசுந்தரி
அறிமுகம்
அஷ்டமாசித்தி எட்டில் பிராப்தி சித்தியினை அருளும் இவர் எட்டு சித்திகளில் முதலாமவர். அஷ்டமா சித்தி எட்டில் இரண்டு சித்திகள் பானம்பக்கத்தில் அருகருகே இருப்பது குறிப்படத்தக்கது. இவ்வாலயத்தின் வடக்குப் புறத்தில் குளத்திற்கும் ஆலயத்திற்கும் இடையே மேற்கூறப்பட்ட ஒரு சிவலிங்கம் இருந்தது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் குளக்கரையை சரி செய்தபோது வெளிப்பட்டது இந்த சிவலிங்கதோடு சேர்ந்து நந்தியும் இருந்தது. இதனை ஊரார் அப்புறப்படுத்தி அதே வடக்கு பகுதியில் பானத்தையும் பூமியில் புதைத்து சிமெண்ட் போட்டு வைத்திருந்தனர். நீண்ட நாட்களாக சுவாமிக்கு நல்ல நிலை வர வேண்டும் என்கிற கோரிக்கையை இறைவன் கோட்செங்க சோழன் திருச்சபை சென்னை மூலம் நிறைவேற்றினார். பெரிய பாணத்துடன் உள்ள இவருக்கு ஆவுடையார் அமைக்க திட்டமிட்டு போது ஒரு சமயத்தில் சுமார் 6 மாத காலம் தயாரான நிலையில் இருந்த ஆவுடையார் மின்னல் சித்தாமூர் கிராமத்தில் உள்ள சிவனுக்கு ஆவுடையார் செய்ய ஆர்டர் கொடுத்து பூர்த்தி ஆகியும் எடுத்துச் செல்லாமல் அப்படியே இடத்தில் இருந்தது. பானம்பாக்கம் சோளீஸ்வரர்ருக்கு ஆவுடையார் செய்ய எண்ணியபோது இந்த ஆவுடையார் கட்சிதமாக பொருந்தியது தெரியவந்தது. மறுநாள் பிரதோஷத்தன்று சுமார் 450 கிலோ பொருந்திய ஆவுடையார் வந்து சேர்ந்தது. பொருளாதார ரீதியாக எப்படி பெரிய தொகையை ஈட்டி இவரை பெற போகிறோம் என்று நினைத்த போது ஒரு அதிசயம் நடந்தது அடுத்த பிரதோஷ நாளன்று இந்த ஆவுடையார் பொருத்தும் விஷயத்தில் அவசியமான பொருளாதார உதவியை வாட்ஸப்பில் வைத்தபோது குவைத்திலிருந்து திருக்கூட்டத்தை சேர்ந்த 7 அன்பர்கள் அதன் பொறுப்பை ஏற்க முடிவு செய்து அனுப்பி வைத்தனர். எந்த சுமையும் இல்லாத இந்தப் பணி நிறைவேற அது ஏதுவானது. 04-10-2020 அன்று பருத்த பாணம் கொண்ட இவரை பூமியிலிருந்து எடுத்த அஷ்ட பந்தனம் சார்த்தி ஒரே நாளில் பீடமும் அமைத்து மேற்க்கூரையும் இடப்பட்டது. பிரமிக்கத்தக்க வகையில் இவ்வளவு எடையுள்ள ஆவுடையாரை தங்கள் தோள்களில் சுமந்து உயிரைப் பணையம் வைத்து அன்று அடியார்கள் பொருத்தினர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே .இந்த பெருமான் இருந்திருக்கவேண்டும். காரணம், கருங்கல் திருப்பணி முந்தைய காலத்தில் பல ஆலயங்கள் செங்கல் திரு பணியினால் மண்ணோடு மண்ணாக போயுள்ளது. அப்படி அழிந்து போன ஒரு சிவன் ஆலயத்தின் சிவாலயத்தில் அருள்பாலித்த பெருமான் தான் இவர். பிரிட்டிஷார் காலத்தில் அஷ்டமாசித்திகள் பற்றிய தகவல் 1926- ல் ஆலயங்களின் கணக்கெடுப்பின்போது பானம் பாக்கத்தில் சோழீஸ்வரர் கோயில் இருந்துள்ளது. ஆனால் அந்தப் பெருமான் அந்த சமயத்தில் எங்கே உள்ளார் என தெரியாமல் இருந்துள்ளது. இறைவன் கிருபையால் ஆதி கைலாசநாதர் என்கிற இவர் வெளிப்பட்டது ஓர் அதிசயமே. இவருடைய முற்காலப் பெயரோடு நமக்கு தெரிய வந்தது ஒரு ஆச்சரியமே. பல்லவர் காலத்திற்கு முற்பட்ட சிவலிங்கத் திருமேனியாக இது இருக்க வேண்டும்.
புராண முக்கியத்துவம்
100 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஏழரை ஏக்கர் இருந்த இந்த கோவில் தற்போது சிதிலமடைந்து சிறியதாக உள்ளது. ஆலயத்தின் அளவு இரண்டரை ஏக்கர் ஆகும். ரதசப்தமி சமயத்தில் சுவாமியின் மீது காலையில் சூரிய கிரகணங்கள் ஸ்ரீகைலாசநாதர் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக முற்றிலும் சிதிலமடைந்து 1920 கணக்கெடுப்பின்படி சிதிலமடைந்த சிவாலயம் என்று அறியப்படும் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் ஆகும். சோளீஸ்வரர் வெளிப்பட்ட சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் அவர் தனது பூஜையில் உள்ள துர்க்கை, சாஸ்தா, பாலசுப்பிரமணியர், சிவலிங்கம், நந்தி இவற்றை தருவதாக கூறினார் ஆனால் கைலாசநாதர் ஆலயத்தில் ஆகம சாஸ்திரம் இடம் தராது என்று தெரியவந்ததால் அதனை தெரிவித்தனர். அந்த சமயத்தில்தான் சோளீஸ்வரர் வெளிப்பட்டன இதனை அவருக்கு கோஷ்ட்டங்களாக அமைய சந்தர்ப்பம் உள்ளது என தெரியவந்தது. அவ்வாறே வந்து சேர்ந்தன. தன் வசத்தே அனைத்தும் தானாகவே வரவைத்த சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. இவ்வூரில் கைலாசநாதர் பல ஆண்டுகளாக அம்பாள் இன்றி இருந்தார். ஸ்ரீவரத மயில்வாகனன் ஓரிடத்தில் தனித்தும் அம்பாள் தனத்தில் தெய்வானையும் வள்ளியும் இருந்தனர். இவர்களை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியராக சேர்க்கும் பாக்கியத்தை அமைத்து தந்தார். அஷ்டமாசித்திகள் அருள பிரதானமாக, திரிபுரசுந்தரி ஷேத்திரமாக உள்ள இந்த ஊரில் ஸ்ரீ திரிபுரசுந்தரி இல்லாமலிருந்த அன்பர்களின் குறையை தீர்த்து வைத்தாள். 11.12.2020 அன்று அபயவரத பாசாங்குசத்துடன் பங்கக் கோலத்தில் புன்முறுவல் பூத்த முகத்தோடு வலது காலை முன்வைத்து வலது காலினை முன்னம் வைத்து அடியார் என்னை அணுகினால் நான் ஒரு அடி முன்னே வைத்து அருள்பாலிக்க தயாராக உள்ளேன் என்பது போல் அமையப்பெற்றார். திருப்திகரமாக கலச அபிஷேகமும் நடைபெற்றது. சோளீசுவரருக்கு மேற்கூரை அமைந்து வழிபாட்டில் வந்த இரண்டே மாதங்களில் அசுர வேகத்தில் சாந்நித்தியம் கூடி வருவது ஓர் அதிசயமாகவே காணப்படுகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு வழிபாட்டில் இருந்திருப்பார் என நமக்கு தெரியாது. ஆனால் கார்த்திகை சோமவாரம் 108 சங்காபிஷேகம் நடந்த 5 வாரங்களில் முதல்முறையாக மூன்றாம் வாரம் இருவருக்கும் சங்காபிஷேகம் நடந்தது. எண்ணற்ற அன்பர்கள் சனி பிரதோஷத்தின்போதும் சமீப காலத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. சரித்திர காலத்தில் கி.பி.1634 கி.பி1673 வரை ஆண்ட விஜயராகவ நாயக்கர் ரகுநாத நாயக்கரின் மூத்தமகன் சேவப்ப நாயக்கரின் வம்சாவளியில் வந்த கடைசி மன்னன் இவன். இந்த மன்னன் பானம்பாக்கம் கிராமத்தினை வெள்ளத்திலிருந்து காத்த உதவியினால் ஊர் மக்கள் அவருக்கு மானியமாக அளித்த கல்வெட்டு ஒன்று புளிய மரம் அருகே கிடைத்துள்ளது. பரம்பரத்து உளரவர் அவர் ஏரி என்று ஆரம்பமாகும் அந்த கல்வெட்டின்படி இவ்விடத்திற்கு பரம்பரம் என்கிற புராதான பெயர் இருந்துள்ளது என்றும் அதுவே மருவி பிற்காலத்தில் பானம்பாக்கம் ஆக உள்ளது. இந்த கல்வெட்டின் படிமம் இவ்வூரின் புளியமரத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டுள்ளது அப்படி பெரிய ஏரியாக 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்த தலத்தில் அந்த ஏரியால் இவ்வாலயம் சிதிலமடைந்து அழிந்து போகக் காரணமாக இருந்திருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பெரிய ஏரி என குறிப்பிட்டுள்ள இப்பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவ்விடத்தில் உள்ள நிலத்தின் பலபகுதிகள் அரசு வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் விடப்பட்டது. பெருமானின் அருளால் அந்த ஆணையை தள்ளுபடி செய்து தக்க வைத்துக் கொண்டனர். தற்போது இவ்வாலயத்தை ஒட்டிய பகுதியில் ஒரு சொட்டு நீர் கூட தங்குவதில்லை என்பது ஓர் மர்மமாகவே உள்ளது. கோசவரம், கொசஸ்தலை ஆறு மற்றும் பாலாறு நிரம்பி வழிந்து பேரம்பாக்கம் பக்கம் வெள்ள நீராக கரைபுரண்டு ஓடிய டிசம்பர் 2020 மழை வெள்ளத்தின் தாக்குதலிலும் ஒரு குடம் நீர் கூட இல்லாமல் வரண்டு உள்ளது என்பது ஒரு நம்பமுடியாத அதிசயம். அருகருகே இரட்டையர்ப் போல் காட்சி தரும் ஸ்ரீ கைலாசநாதர் அதில் ஒருவரை ஒருவர் மிஞ்சியே உள்ளார். டிசம்பர் 11ஆம் தேதி நடந்த கலசாபிஷேகத்தின் போது இந்த ஊரில் நவகிரக சன்னதி வேண்டும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்கு அச்சாரமாக ஒருவர் தான் வேண்டுமானால் ஒரு விக்கிரத்திற்கு உதவி கூட புரியத் தயாராக உள்ளேன் என்றார். 27-12-2020 அன்று நடைபெறும் சனி பெயர்ச்சியை முன்னிட்டு ஒர் ஹோமம் நடத்த திட்டமிடப்பட்டது. அச்சமயத்தில் ஸ்ரீ சனீஸ்வரரின் படமோ விக்கிரமோ இல்லாது உள்ளது என்று எண்ணி அதற்கான ஆலோசனையினை ஸ்தபதியிடம் கேட்டபோது மேலும் நம்ப முடியாத சம்பவம் நடந்தது. கடந்த நான்கு மாதங்களாக செய்யப்பட்ட தயாராக உள்ள நவக்கிரக சிலைகள் செய்யப்பட்டு உள்ளது, அதனை செய்யத் திட்டமிட்ட ஊரார் இரண்டு மாதம் கழித்து எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அதனை ஸ்ரீ சோளீசுவரர் சந்நிதிக்கு கொடுக்க முடியும் என்றும் கூறினார். அது போலவெ சனிப்பெயரிச்சியின் போது நவக்கிரக சந்நிதியும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது ஓர் நிதசர்னமான அதிசய உண்மை. தான் நினைத்தை தானாகவே நிறைவேற்றிக் கொள்ளும் ஸ்ரீ சோளீசுவரர் அன்பர்களுக்கும் அவ்வாறே தரும் பேறு பெற்றவர் என்பது சமீப காலத்தில் கண்கூடாகப் பார்க்கப்படுகிறது.
நம்பிக்கைகள்
திருக்குளம் ஸ்ரீ கைலாசநாதர் இருக்கும் இடத்திற்கும் இடையே வடக்கில் அமைந்திருப்பதாலும் இவருக்கு அபிஷேகம் செய்து செல்லும் நீர் குளத்தில் சென்று விடுவதால் அந்த நீர் வியாதிகளைப் போக்கும் சகல நலன்களை தரும் என்று ஐதீகம். கடன் தொல்லைகளில் உள்ளோரும் இவரை வழிபட இதனால் கடன் சுமையில் இருந்து வெளியேறி நல்ல நிலைக்கு வருவர், குடும்பத்தில் நல்ல சூழல் மீண்டும் திரும்பும். . தான் நினைத்தை தானாகவே நிறைவேற்றிக் கொள்ளும் ஸ்ரீ சோளீசுவரர் அன்பர்களுக்கும் அவ்வாறே தரும் பேறு பெற்றவர் என்பது சமீப காலத்தில் கண்கூடாகப் பார்க்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
முற்காலத்தில் ரிஷிகள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் நிறைய குளத்தை ஒட்டி இருந்துள்ளது. அகத்தியர் வழிபட்ட தலமாகவும் அஷ்டமாசித்திகள் அறிவுரையின் பேரில் வழிபட்டதாகவும் உள்ள இந்த பெருமானுக்கே வடக்கே அகத்தியர் தீர்த்தம் என்ற மிகப் பெரிய திருக்குளம் உள்ளது.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செஞ்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
செஞ்சி பானம்பாக்கம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை
0