அருள்மிகு கொங்கணீஸ்வரர் திருக்கோயில், காவேரிப்பாக்கம்
முகவரி
அருள்மிகு கொங்கணீஸ்வரர் திருக்கோயில், காவேரிப்பாக்கம், வேலூர் மாவட்டம் – 632 508
இறைவன்
இறைவன்: கொங்கணீஸ்வரர் இறைவி: குங்குமவல்லி
அறிமுகம்
தொண்டை மண்டலத்தில் காஞ்சிக்கு அடுத்த படியாக சிவன், விஷ்ணு கோயில்கள் நிறைந்த திரிவேணி சதுர்வேத மங்கலம் என்று அழைக்கப்படும் காவேரிப்பாக்கத்தில் கொங்கணர் மகரிஷி வழிபட்ட ஞான குழலேந்தி கொங்கணீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு காலத்தில் கோட்டை கோயில் என்றும், ஞான குழலேந்தி குங்கும வள்ளி அம்பாள் சமேத கொங்கணீஸ்வரர் கோயில் என மக்கள் அழைத்து வந்துள்ளனர். ஆனால், இன்று அந்த கோட்டைக்கான அடையாளம் எதுவுமின்றி இக்கோயிலின் மூலவர் விமானம் சுற்றுச்சுவர் போன்றவை சிதலமடைந்து வருகின்றன. சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு விவசாய நிலங்கள் மற்றும் பஜார் வீதியில் கடைகள் என ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இருப்பினும் இக்கோயிலில் ஒரு கால பூஜை நடைபெறுவது மிகவும் அரிதாக உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக பராமரித்தாலே கோயிலை சீரமைத்து நித்திய பூஜை செய்யலாம். ஆனால் அறநிலையதுறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
புராண முக்கியத்துவம்
மேலும், இப்பகுதியில் உள்ள சைவபுரம் என்று அழைக்கக்கூடிய கொண்டாபுரம் திருவள்ளுவருடைய மனைவி வாசுகி பிறந்த ஊராகும். இப்படி சிறப்புமிக்க காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள கொங்கணீஸ்வரர் கோயிலில், கலிங்கம் காந்தாரம், அயோத்தியா, அவந்தியா, பர்மா, பாரசீகம் உள்ளிட்ட 56 தேசங்களை ஆண்ட கொங்கணர் இல்லறத்தை துறந்து கானகம் மேற்கொண்டபோது இவ்வூருக்கு வந்து இங்குள்ள ஈஸ்வரனை வழிபட்டதால் கொங்கணீஸ்வரர் என்று இக்கோயில் அழைக்கப்பட்டுள்ளது. அப்போது, அவருடைய மனைவி ஞான கிளியாம்பிகை உடன் வந்துள்ளார். பின்னர், இங்கு ஆசிரமம் அமைத்து ஈஸ்வரருக்கு பூஜைகள் செய்தும், தவம் புரிந்தும் வந்தாராம். இதையடுத்து, திருப்பதி மலை அடிவாரம் சென்று அங்கு ஜீவ சமாதி அடைந்ததாக இக்கோயில் தல புராணம் விவரிக்கின்றன. இக்கோயிலில் மூலவர் கொங்கணீஸ்வரர் மேற்கு நோக்கியும் குங்குமவல்லி அம்பாள் நின்ற கோலத்தில் வடக்கு திசை நோக்கியும், நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர் என்பது இக்கோயிலின் சிறப்பாக விளங்கி வருகின்றன. மேலும், இக்கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை அன்று மூலவர் மீது சூரிய ஒளி படும் நிகழும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று மூலவர் சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடைபெற்றன. இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வு பொது மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காவேரிப்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வேலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை