Thursday Dec 26, 2024

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம்

முகவரி

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், களம்பூர் போஸ்ட், திருவண்ணாமலை மாவட்டம் – 606 903.

இறைவன்

இறைவன்: எந்திர சனீஸ்வரர்

அறிமுகம்

ஏரிக்குப்பம் சனீஸ்வரபகவான் கோயில் ஆரணி – படவேடு சாலையில் ஏரிக்குப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. எந்திர சனீஸ்வரர் ஆலயம். திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மி தூரத்திலும் வேலூரில் இருந்து 30 கி.மி. தூரத்தில் உள்ளது. சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவக்கிரக தலங்களுள் ஒன்று. சனி பகவான் இந்த கோயிலில் சிவலிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒர முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள திறந்த வெளி கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் உடைய ஸ்ரீ சனீசுவர பகவானின் யந்திர நடுவில் அறுகோண வடிவமும், அதன் ஆறுமுனைகளில் திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமன் ஆகியோரது வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. நெற்றி போன்ற மேற்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவங்களும் அவற்றின் இடையே ஒரு காகத்தின் உருவமும் உள்ளது. நுழைவாயிலில் சனி பகவான் காகங்கள் இழுத்துச்செல்லும் ரதத்தில் அமர்ந்து இருப்பதுபோன்ற சிற்பம் உள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் அனைத்து நவகிரகங்களும் அதன் வாகனங்களுடன் ஓவியமாக வரையப்பட்டுள்ளது

புராண முக்கியத்துவம்

கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் படைவீட்டை தலைநகராகக் கொண்டு சம்புவராய மன்னர்கள் அரசு புரிந்து வந்தனர். அவர்களின் படை தளபதிகளுள் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் ஒருசமயம் குதிரையில் செல்லும்போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு பரிகாரமாக அவர், தான் கீழே விழுந்த இடத்தில் யந்திர வடிவில் சனீஸ்வர பகவானைத் தாபித்து வணங்கி பூரண குணமடைந்தார். கால மாற்றத்தால் புதைந்து கிடந்த ஆவ்விக்கிரகத்தைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர் என்பது வரலாறு. நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். வேலூர் அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோயில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பினர். எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்

நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். இத்தலத்தில் சனிபகவான் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.

சிறப்பு அம்சங்கள்

சனிப்பெயர்ச்சியால் உண்டாகும் தோஷம் நீங்கவும், ஜாதக ரீதியாக சனி நீசம் பெற்றவர்களும் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சனிப்பெயர்ச்சி விழா இவருக்கு 5 நாள் நடக்கும். இவ்வேளையில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் நடத்தப்படும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, வழக்குகளில் வெற்றி பெற இங்கு வழிபடுகிறார்கள். சனிபகவான் மனிதர்களின் ஆயுளை நிர்ணயிக்கும் ஆயுள், தொழிலை நிர்ணயம் செய்பவராக இருக்கிறார். எனவே, நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தொழில் சிறக்கவும் இவருக்கு எள் தீபமேற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஏரிக்குப்பம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆரணி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top