அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில்
முகவரி
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில், வீரசோழபுரம், கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் – 606 206.
இறைவன்
இறைவன்: அர்த்தநாரீஸ்வரர் இறைவி: அனுபாம்பிகை
அறிமுகம்
கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இவரது பரம்பரையை சேர்ந்தவர்கள் தெற்கு நோக்கி ராஜகோபுரம் கட்டுவதற்கு முற்பட்டனர். ஆனால் அப்போது இந்த பணியில் ஈடுபட்டவர் இறந்ததால், ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையாமல் போனது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் அமைந்துள்ளது, அர்த்தநாரீஸ்வரர் கோவில். 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை, சித்தர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடந்த 200 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமலும், குடமுழுக்கு நடத்தப்படாமலும் கோவில் முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
இக்கோவிலில் இருந்த முருகன் சிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது. இதையடுத்து இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தற்போது இக்கோவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிலைகளின் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கோவிலில் உள்ள 12 ஐம்பொன் சிலைகள் மற்றும் அதே கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்த 5 ஐம்பொன் சிலைகள் என மொத்தம் 17 ஐம்பொன் சிலைகளை கெங்கையம்மன் கோவிலில் வைத்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் இந்த சிலைகளை விழுப்புரத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவின் பேரில் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையிலான அதிகாரிகள் கெங்கையம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 17 ஐம்பொன் சிலைகளையும், விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வந்து, அங்கு பாதுகாப்பாக வைத்தனர். 2016ல் அறநிலையத் துறை ஆய்வாளர் சரவணன், ஆய்வு செய்தார். வரதராஜ பெருமாள் கோவிலில், சந்தான கோபாலகிருஷ்ணன் ஐம்பொன் சிலை காணாமல் போனது பற்றி, தியாகதுருகம் போலீஸில் புகார் கொடுத்தார். இக்கோவிலுக்கு சொந்தமாக, வீரசோழபுரத்தில், 70 ஏக்கர் நிலமும், வி.பாளையம் கிராமத்தில், 10 ஏக்கர் நிலமும் உள்ளன. கோவில் நிலங்களை குத்தகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருவாயை வைத்து, மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம், கோவில் பூஜைகள் செய்யப்படுகின்றன. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயமான பின், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் கட்ட, பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், வீரசோழபுரத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் புன்செய் நிலமும் அடங்கும். அந்த நிலத்தினை, வருவாய் துறைக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான அரசாணை, செப்., 19ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதற்கான விளம்பரம், அறநிலைய துறையால் வெளியிடப்பட்டது. இம்மாதம், 23ம் தேதி, கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வீரசோழபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி