அந்தநல்லூர் வட தீர்த்தேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி
அந்தநல்லூர் வட தீர்த்தேஸ்வரர் திருக்கோயில், அந்தநல்லூர், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம் – 639101.
இறைவன்
இறைவன்: வட தீர்த்தேசுவரர் / ஆலந்துறை மகாதேவர் இறைவி: பாலசுந்தரி / பால சௌந்தர நாயகி
அறிமுகம்
அந்தநல்லூர் வட தீர்த்தேசுவரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரத்தை அடுத்து திருச்செந்துறை உள்ளது. அதனை அடுத்து 1 கிமீ தொலைவில் உள்ள அந்தநல்லூரில் இக்கோயில் உள்ளது. ஆலந்துறை இன்று “அந்தநல்லூர்” என்ற நாமத்தால் விளங்குகின்றது. இறைவன் வட தீர்த்தேசுவரர் என்றும் ஆலந்துறை மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பாலசுந்தரி என்றும் பால சௌந்தர நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். பராந்தக சோழன் காலத்திய கற்றளியாக இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். 25.08.2008-ல் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றுள்ளது.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஜெயபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி / ஜெயபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி