அத்திவெட்டி ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் சிவன் கோவில், தஞ்சாவூர்
முகவரி
அத்திவெட்டி ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர் சிவன் கோவில், அத்திவெட்டி, புதுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் – 614613
இறைவன்
இறைவன்: ஸ்ரீ சவுந்தர்யேஸ்வரர்
அறிமுகம்
தஞ்சை மாவட்டம் மதுக்கூர்-முத்துப்பேட்டை சாலையில் விக்கிரமம் என்னும் கிராமத்திற்கு தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்திவெட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான சவுந்தரேஸ்வரர் சிவாலயம் முற்றிலும் சிதைந்து அழியும் நிலையில் உள்ளது. சோழர் தேசமல்லவா? ஆம் சோழர்கால கட்டடக் கலை தான் இக்கோவில். சுவாமி கோவில் மட்டும் பிரஸ்தரம் வரை கற்றளியாக உள்ளது. கழுத்து, விமானம் ஆகியவை செங்கல் கட்டட அமைப்பு. மற்ற சன்னதிகள் செங்கல் கட்டுமானம். கோவில் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கற் தூண்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கின்றன. மூலவர் சவுந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியாக வெளியில் ஒரு கொட்டகையில், ஒரு நேர பூஜை கூட இல்லாமல் அருள்பாலிக்கிறார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அத்திவெட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி