அடியக்கமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
அடியக்கமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
அடியக்கமங்கலம், திருவாரூர் வட்டம்,.
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
இவ்வூர் திருவாரூர்- கீவளூர் சாலையில் ஆறு கிமீ தூரத்தில் உள்ளது. பிரதான சாலையில் இக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கியது. முகப்பில் ராஜகோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்று மதில் சுவருடன் ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது இக்கோயில். நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் அக்காலத்திய முகப்பு மண்டபம் இறைவன் கருவறை முன்னர் அணிசெய்கிறது. இறைவன் காசி விஸ்வநாதர் இறைவி காசி விசாலாட்சி சிறிய அளவிலான மூர்த்திகளாக உளள்னர். முகப்பில் இரு துவார பாலகர் சிலைகள் உள்ளன. அதன் எதிரில் நந்தி பலிபீடம் உள்ளன. கருவறை கோட்டங்களில் தென்முகன் மட்டுமே உள்ளார் பிற தெரிவங்கள் ஏதுமில்லை. சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார்.
பிரகார சிற்றாலயங்கள் விநாயகருக்கும் முருகனுக்கும் உள்ளன. முருகனை ஒட்டி வடமேற்கில் ஒரு தகர கொட்டகை ஒன்றில் ஆஞ்சநேயர் பாலஆஞ்சநேயர் எனும் பெயரில் உள்ளார். அவரின் பின்புறம் ஒரு வேம்பின் கீழ் ஒரு பழமையான ஆஞ்சநேயர் சிலை சற்று பின்னமாகி கிடக்கிறது. இவர் புதியவர். முகப்பு மண்டபத்தின் வெளியில் வலதுபுறம் ஒரு சிறு சிற்றாலயம் போல் கட்டப்பட்டு அதன் மேல் புறம் சங்கு சக்கரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இடம் ஆஞ்சநேயருக்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆகம விதிப்படி அந்த இடத்தில சனிபகவான் வைக்கப்படவேண்டும் என்று தெரிந்து அதனை காலியாக விட்டுள்ளனர் போலும். துர்க்கை வடக்கு நோக்கி கோஷ்டத்தில் இல்லாமல் தனித்து சன்னதி கொண்டுள்ளார். வடகிழக்கில் சனி பகவான் சிறு மாடத்தில் மேற்கு நோக்கி உள்ளார். அருகில் இரண்டு நாகர்கள் உள்ளனர். எளிமையான கோயில், ஊரே பச்சை மயமாகிவிட்டது சில தெருக்களே இந்துக்கள் உள்ளனர். எனினும் காலை மாலை விளக்கேற்றல், வழிபாடுகள் நடக்கின்றன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அடியக்கமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி