Wednesday Dec 18, 2024

அகிலாம்பேட்டை ஜம்புகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

அகிலாம்பேட்டை ஜம்புகேஸ்வரர் சிவன்கோயில்,

அகிலாம்பேட்டை, நன்னிலம் வட்டம்,

திருவாரூர் மாவட்டம்.

இறைவன்:

ஜம்புகேஸ்வரர்

இறைவி:

அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்:

அகிலாம்பேட்டை; பேரளத்தின் தெற்கில் உள்ள இஞ்சிகுடியினை ஒட்டியே உள்ளது. மற்றொரு வழியாக பேரளம் காரைக்கால் சாலையில் பேரளத்தில் இருந்து சிறிய சாலை தெற்கு நோக்கி செல்கிறது, அதில் 2 கிமீ தூரம் சென்றால் நாட்டாற்றின் கிளை ஆறு ஒன்றின் கரையோரம் இந்த சிறிய ஊரும் சிறிய கோயிலும் உள்ளன. திருஆனைக்கா திருக்கோயில் போலவே இங்கும் இறைவன் ஜம்புகேஸ்வரர், இறைவி அகிலாண்டேஸ்வரி, அகிலத்தை காக்கும் அன்னையின் பெயரிலேயே இவ்வூர் அகிலாம்-பேட்டை எனப்படுகிறது. இறைவன் கிழக்கு நோக்கிஉள்ளார், இறைவன் எதிரில் அழகிய நந்தியும் உள்ளது. கருவறை வாயிலில் அழகிய விநாயகர் மற்றும் பாலமுருகன் சிறிய மாடத்தில் உள்ளனர். கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். இறைவி தெற்கு நோக்கிய கோலம் கொண்டுள்ளார். உள்ளூர் மக்களின் இஷ்ட தெய்வமாக உள்ளார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அகிலாம்பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top