அகரம் அஞ்சேல் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில்,
அகரம்,
திருநெல்வேலி மாவட்டம் – 628 252.
போன்: +91 4630 – 261 142
இறைவன்:
அஞ்சேல் பெருமாள்
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் அமைந்துள்ள அஞ்சேல் பெருமாள் கோயில், விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் அனைத்து தசாவதார சிலைகளும் உள்ள ஒரே கோவில் இதுதான். பித்ரு தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களுக்கு பரிகார ஸ்தலம் இது. திருநெல்வேலியிலிருந்து கிழக்கே 12 கிமீ தொலைவில் தூத்துக்குடி நெடுஞ்சாலையிலிருந்து தாமரைபரணிக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் சம்பு தீர்த்தம்.
புராண முக்கியத்துவம் :
அகரம் கிராமத்தில் மித்ரசகா என்ற நாடக கலைஞன் வாழ்ந்து வந்தான். இவன் தன் குழுவினருடன் நாடெங்கும் சென்று நல்ல கருத்துக்களை நாடகம் மூலம் பரப்பி வந்தான். ஒரு முறை காஷ்மீரில் தன் இஷ்ட தெய்வமான நாராயணனின் தசாவதாரக்கதையை நடத்தி காட்டினான். அதை காணவந்த காஷ்மீர் மன்னன் குங்குமாங்கனும், இளவரசி சந்திரமாலினியும் அகமகிழ்ந்தனர். சந்திரமாலினிக்கு மித்ரசகாவின் மீது காதல் உண்டானது. பெற்றோரின் ஒப்புதலுடன் மணமுடித்து அகரம் கிராமத்திற்கு வந்தனர். அனைவரும் பாராட்டும் படி வாழந்த இத்தம்பதியினர் வயோதிக காலத்தில் ஒர் ஆசிரமம் அமைத்து இறைப்பணியில் ஈடுபட்டனர். நாராயணனின் சிறந்த பக்தர்களாக விளங்கினர். இவர்களது பக்திக்கு மெச்சிய நாராயணன், மாசி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் தசாவதாரக் காட்சி தந்து “ஓம் நமோ பகவதே வாசுதேவாய எனும் அற்புத மந்திரத்தையும் உபதேசித்தார்.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
சிறப்பு அம்சங்கள்:
இறைவனின் அவதாரம், பெருமை இவற்றை விளக்கி சொல்லும் நூல்களை புராணம் என்கிறோம். தாமிரபரணி மஹாத்மிய புராணம் ஒரு முக்கிய நூல். அதில் தான் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட தாமிரபரணி நதி பற்றியும், அதன் கரையோரத்திலுள்ள புண்ணிய ஸ்தலங்களின் வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அகரம் பெருமாள் கோயிலும் இதில் ஒன்று. இங்கு தான் மகாவிஷ்ணுதன் பத்து அவதார காட்சிகளையும் தந்திருக்கிறார்.
தல சிறப்பு : பெருமாள் இங்கு தசாவதாரக் காட்சி தந்ததால் இத்தலம் தசாவதாரத்தலம் என்று அழைக்கப்படுகிறது. தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு முகமாக செல்வதால் தட்சிண கங்கை எனவும், சம்பு தீர்த்தம் எனவும் போற்றப்படுகிறது. எனவே இங்கு நீராடி வழிபட்டு எந்த பரிகாரம் செய்தாலும் அது காசியில் செய்த நற்பலனைத் தரும்.இத்தல பெருமானைஹயக்கிரீவர், அத்ரி மகரிழி, மாண்டவ்யர், கவுதமர், ஆங்கிரஸர், வசிஷ்டர், சோமர், துர்வாசர், கபிலர், முத்ராதேவிக்ஷ, அகத்தியர் போன்றோர் வழிபட்டுள்ளனர்.
திருவிழாக்கள்:
வைகுண்ட ஏகாதசி
காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அகரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை