Tuesday Jul 02, 2024

வச்ரகிரி மலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்

வச்ரகிரி மலையில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தை உங்களால் மீட்க முடியுமா?
அனைவரும் வெட்கபடவேண்டிய துயரசெய்தி..
ஒவ்வொரு இந்துவும் தயவுசெய்து முழுமையாக படித்து பாருங்களேன்…

சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு⛰ மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் ⛪ நிச்சயம் பார்த்திருப்பார்கள். 

மலை உச்சியில் உள்ள அந்தப் பாழடைந்த கட்டடத்தின் பின்னணி கதை தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் அல்ல, உதிரமே கொட்டும். கீழே இருந்து அல்லது பேருந்தில் செல்லும்போது பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம்.
அச்சரப்பாக்கத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த அழகிய மலைத்தொடரின்⛰ பெயர் வஜ்ரகிரி மலை. இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது

பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். 

ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.
வஜ்ரகிரி மலையின் ஒரு பகுதியை 1960களிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் இப்போது மலை உச்சியிலும், அடிவாரத்திலும் பிரம்மாண்டமான `மழைமலை மாதா அருள்தலம்’ என்ற சர்ச்சைக் கட்டியுள்ளனர். 

மலையில் எங்கு பார்த்தாலும் சிலுவைகளை நட்டு முழு மலையையும் மெல்ல மெல்ல கைப்பற்றி விட்டனர். பைபிளில் வரும் காட்சிகள் சிமெண்ட் சிற்பங்களாக மலை உச்சி வரை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போதே `மரியே வாழ்க’ என்ற வரிகள் பளிச்சென்று தெரிகிறது.

பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை ஆரம்பமாகும் இடத்தில், அலங்கார நுழைவுவாயில் ஒன்றை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், சர்ச் அலங்கார நுழைவு வாயிலுக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.

 இப்போது அந்த பாதையிலும் சர்ச் நிர்வாகத்தினர் முட்களால் வேலி அமைத்து வாகனங்கள் செல்லமுடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி சில பக்தர்கள் தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். அந்த பாதையிலும் குப்பைகளைக் கொட்டி கிறிஸ்தவர்கள் நாசம் செய்து வருகின்றனர்.

எப்படியாவது மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையை இல்லாமல் செய்துவிட்டால் முழு மலைத்தொடரையும்ஆக்கிரமித்து விடலாம் என்ற திட்டத்தில் சர்ச் நிர்வாகம் செயல்படுவதாக அச்சிறுபாக்கத்தில் வசிக்கும் இளைஞர்கள் நம்மிடம் கூறினார்கள்.

அச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அவலத்தையும் சர்ச் நிர்வாகத்தின் அட்டூழியங் களையும் கண்டு மனம் வெதும்பினார்கள். கோடிகளைக் கொட்டி எல்லோரையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவப் பாதிரிகளை, இந்தக் கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்?

 ஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர்.
1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். 

ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ’ என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர்.

சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் இந்த சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் சிலர் வந்து `இது வனத்துறைக்கு சொந்தமான இடம்..
அனுமதியில்லாமல் யாரும் எதுவும் செய்யக்கூடாது.
என தடுத்தனர்.

சர்ச்சுக்கு மட்டும் எல்லா சலுகைகளையும் கொடுக்கிறீர்களே அதுமட்டும் சரியா என கேள்வி கேட்டதற்க்கு, 

அவர்கள்  99 வருட குத்தகைக்கு இந்தமலை எடுத்துள்ளனர் என்றார்கள்.

அச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் சமகாலத் தவையாகும்.

அச்சிறுபாக்கம் இந்துக்களின் கோரிக்கைகள் : –

* மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்ல, முன்னோர்களால் அமைக்கப்பட்ட பாதையை சீரமைக்க வேண்டும். இந்தப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் கிறிஸ்தவர்கள் கட்டியுள்ள அலங்கார நுழைவு வாயிலை அகற்றிவிட்டு பசுபதீஸ்வரருக்கு நுழைவு வாயில் கட்ட வேண்டும்.

* பசுபதீஸ்வரருக்குச் சொந்தமான வஜ்ரகிரி மலையை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

* வஜ்ரகிரி மலையில் உள்ள பாறைகளை உடைத்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

* இந்துக்களின் வழிபாட்டு முறையையே பின்பற்றச் செய்து, அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதைத் தடுக்க வேண்டும்.

* பசுபதீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளையும், மின்சார போர்டுகளையும் உடைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைக்கு வேலி!

* வஜ்ரகிரி மலையை நாங்கள் 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்று பாதிரிகள் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். இதற்கு வனத்துறையினர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

வீட்டிற்கோ அல்லது வயல்வெளிகளுக்கோ வேலி அமைப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அச்சிறுபாக்கத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் கட்டியுள்ள மழைமலை மாதா என்ற சர்ச் உள்ள மலை முழுவதையும் ஏதோ தங்கள் குடும்ப சொத்துபோல வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த மலைக்கு கீழ்தான் வனத்துறை அலுவலகமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்கள் அனைவரும்  இதற்கு தீர்வு கிடைக்கும்வரையில் இச்செய்தியை பகிர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.. 
ஒவ்வொரு இந்துமதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதையாவது செய்வீர்களா..???
Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top