Saturday Nov 16, 2024

ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், கோவில் தோப்பு, அண்ணா நகர், திருத்துறைபூண்டி, திருவாரூர் மாவட்டம் .

மறு பிறவி இல்லாத சிவன் ஆலயம்.

ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், கோவில் தோப்பு, அண்ணா நகர், திருத்துறைபூண்டி, திருவாரூர் மாவட்டம் .

இத் திருக்கோவில் மிகவும் பழமையானது

மிக பழமையான உளி படாத திருமேனி

ராஜ ராஜ சோழரால் கட்ட பட்ட சிவாலயம்

சிங்களர்களை அடிமை படுத்தி தஞ்சை பெரியகோவிலை கட்ட கொண்டு வந்த போது இங்கு தங்க வைக்க பட்ட இடம் இது

இந்த ஊரின் பெயர் கோவில் சிங்களாந்தி என இன்றளவில் பழமை மாறாமல் உள்ளது சிறப்பு

தினமும் சூரிய பகவான் வழிபடுகிறார்:தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார்.

நாகம் வந்து இரவில்வழிபடுகிறது :கோவிலில் மேல் சுவரில் மாதம்தோறும் பாம்பு சட்டை காண படுகிறது

பழங்கால கருங்கல் திருப்பணி முற்றிலும் அழிந்து விட்டது

கருவறை மட்டும் அழியாமல் உள்ளது 
மேற் கோபுரம் இல்லை

கல்வெட்டுகள் நிறைய உள்ளது அருகே கிடக்கும் கல்களில் கல் வெட்டுகள் நிறைய காண படுகிறது

அவை கல் குவியலாய் உள்ளது

மேற் கூறை இல்லாமல் தகரம் மூலம் மேற் கூரை அமைக்க பட்டு உள்ளது

கைலாசம் சென்று தரிசிக்க முடியாதவர்கள் இங்கு தரிசிப்பது நலம்

இவ்வாலயத்தில் இரண்டு பைரவர் கால பைரவர் யோகா பைரவர் இருப்பது கூடுதல் சிறப்பு .

அர்த்தநாரீஸ்வரர் தனி கோவிலிருந்து அருள் பாலிக்கிறார்

பிரம்மா நின்ற திரு கோலத்தில் அருள் பாலிப்பது இங்குதான் இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம்.

பெருமாள் தனி கோவிலில் இருந்து பாலிப்பதும் இங்கு தான்

அழகிய முருகன் வள்ளி நால்வர் பெருமக்களில் மூவர் காண வில்லை.

அப்பர் தெய்வயானை மட்டும் காட்சி தருகிறார்கள்

அழகிய தெய்வ திருமேனிகளை காண கண் கோடி வேண்டும்

நவ கிரகங்கள் இல்லை

அய்யனார் தனது மனைவிகளுடன் ஒரே கல்லில் இருப்பது மிக சிறப்பு

கோவிலில் மூன்று சிவலிங்கம் உள்ளது

வடக்கு புரம் கோவில் குளம் பாழ்பட்டு உள்ளது

கோவில் திருப்பணி வேண்டி மாதம் தோறும் சிவபீடம் அன்பர்கள் சார்பில் பௌர்ணமி பூஜை மாலை 8 மணி முதல் 10 மணி வரை நடை பெறுகிறது

கோவில் அர்ச்சகர் மட்டும் வழிபட்ட கோவிலில் கடந்த 8 மாதங்களாக சிவபீடம் அன்பர்களும் கலந்து கொண்டு பூஜை செய்து அருள் பெற்று வருகிறார்கள்

கடந்த மகா சிவராத்திரி இரவு முழுவதும் திருப்பணி நடைபெற வேண்டி 1008 அகல் தீபம் ஏற்றி அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்து வழிபட்டார்கள்

நித்திய பால் அபிஷேகம் செய்ய கோமாதா தானம் தருவோர் வழங்க முன்வரலாம்
பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.

பூஜை பொருட்கள் அபிசேக பொருட்கள் வழங்க முன் வரும் அன்பர்கள் 

கோவிலுக்கு தினசரி அபிசேகத்திற்கு கோ தானம் செய்ய விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்

கோவில் அர்ச்சகர் சிவ முரளி அய்யா cell 9659253723


அருள்மிகு கைலாசநாதர் அருள் வேண்டி சிவ முத்துராமன் சிவபீடம் 94433 90589


On Sat, 14 Mar 2020, 10:19 am Ramachandran Viswanathan, <ramvis@gmail.com> wrote:
Visited a Unique Kulothunga Period temple near Villupuram , 1 km from National Highway .  
Details in my Recent FB Photo Album TOUR – Hills of Central Tamilnadu

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top