T.நெடுஞ்சேரி சிவன்கோயில், கடலூர்
முகவரி :
T.நெடுஞ்சேரி சிவன்கோயில்,
T.நெடுஞ்சேரி, காட்டுமன்னார்கோயில் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608305.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
காட்டுமன்னார்கோயிலில் இருந்து வீராணம் ஏரிக்கரை வழியாக சிதம்பரம் செல்லும் சாலையில் பத்தாவது கிமீ-ல் உள்ளது இந்த T.நெடுஞ்சேரி. தெற்குநாடு நெடுஞ்சேரி என்பதன் சுருக்கமே T.நெடுஞ்சேரி. சாலையின் தென்புறம் T.புத்தூர் எனவும் வடபுறம் T.நெடுஞ்சேரி எனவும் அழைக்கப்படுகிறது. வீரநாராயணன் ஏரியில் இருந்து நான்கு கிமீ தூரம் தான் கிழக்கு நோக்கிய சிவன்கோயில். பத்து சென்ட் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது.
கோயில் குளமும், கோயிலின் எதிரில் உள்ள மீதி இடங்களும் பள்ளி கட்டிடங்களாகிவிட்டன. நுழைவாயில் மேல் ரிஷபக்காட்சி சுதையாக உள்ளது அதனை கடந்தால் கொடிமர விநாயகர் நந்தி பலிபீடம் உள்ளது இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும், இறைவி தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளனர். இறைவன் சற்று பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவியும் அழகான வடிவு கொண்டு விளங்குகின்றனர்.
கருவறை கோட்டத்தில் விநாயகர் தென்முகன் மட்டும் உள்ளன. வடபுறம் துர்க்கை உள்ளார். சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். தென்மேற்கில் விநாயகர், வடமேற்கில் முருகனும் அழகிய சிற்றாலயம் கொண்டுள்ளனர். முருகன் சன்னதியை ஒட்டி சிறிய கோயிலாக மகாலட்சுமி உள்ளார். வடபுறம் பெரிய வன்னி மரம் தழைத்தோங்கி உள்ளது, அதனடியில் ஒரு நாகரும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவகிரகங்களும், காலபைரவர் சன்னதியும் உள்ளன.
கோயிலை சிதம்பரத்தை சேர்ந்த குருக்கள் பூஜை செய்கின்றார், அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் பிள்ளைமார் ஒருவர் உடனிருந்து கவனிக்கிறார். கோயில் பராமரிப்பு மற்றும் இதர செலவினங்களை மாடர்ன் ரைஸ்மில் திரு.நடராஜன் பிள்ளை செய்தளிக்கின்றார்கள். கோயிலில் அனைத்து உற்சவங்களும் நல்ல முறையில் செய்யப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
T.நெடுஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி