Saturday Jan 04, 2025

முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி : முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில், முத்தாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் – 628619. இறைவி: குணவதியம்மன் அறிமுகம்: முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் தருபவளாக  வடக்கு நோக்கி அமர்ந்து அருட்பாலிக்கிறார் குணவதியம்மன்.  நெல்லை – திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூர் அடுத்துள்ளது முத்தாலங்குறிச்சி. புராண முக்கியத்துவம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு  மதுரையை சேர்ந்த வணிகர்  ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி  கர்ப்பிணியாக  இருந்தார்.   தலைப் பிரசவம் பார்க்க  […]

Share....

தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்

முகவரி : தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613002. இறைவன்: தஞ்சபுரீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அம்மன் அறிமுகம்:  அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம். தஞ்சை மாநகரில் கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீசுவரர் என்னும் பெரு உடையார் கோவில் தொடங்கி, அதன்பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் தங்களது பக்தியினையும் கலை உள்ளத்தையும் […]

Share....

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில், கன்னியாகுமரி

முகவரி : கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் – 629702. இறைவன்: வெங்கடாசலபதி அறிமுகம்: இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி […]

Share....

கண்ணூர்ப்பட்டி ஸ்ரீபெரியாண்டவர் (ஆதி பராசக்தி) கோயில், நாமக்கல்

முகவரி : கண்ணூர்ப்பட்டி ஸ்ரீபெரியாண்டவர் (ஆதி பராசக்தி) கோயில் கண்ணூர்ப்பட்டி, நாமக்கல் மாவட்டம் – 637014. இறைவி: ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி / ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அறிமுகம்: ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மகிமை வாய்ந்த ஒரு சக்தி ஸ்தலம். இந்தக் கோயில், தமிழ்நாட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் என்னும் ஊரிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 2 மைல் தொலைவில் அமைந்திருக்கும் கண்ணூர்ப்பட்டி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅம்பாள் ஆதி பராசக்தியின் அம்சமாகும். இந்த […]

Share....

பூவாளூர் திருமூலநாத சுவாமி திருக்கோயில், திருச்சி

முகவரி : பூவாளூர் திருமூலநாத சுவாமி திருக்கோயில், பூவாளூர், திருச்சி மாவட்டம் – 621712.:   இறைவன்: திருமூலநாத சுவாமி இறைவி: குங்கும சவுந்தரி அம்பாள் அறிமுகம்: தன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி தவம் செய்த தலமே பூவாளூர். மன்மதபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்தலம் இருந்ததால், ‘பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது. இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் […]

Share....

தட்டான்குட்டை பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில், நாமக்கல்

முகவரி : தட்டான்குட்டை பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில், தட்டான்குட்டை, நாமக்கல் மாவட்டம் – 637207. இறைவி: பச்சைத் தண்ணீர் மாரியம்மன் அறிமுகம்:  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது தண்ணீரில் கோயில் விளக்கை எரிய வைப்பது வழக்கம். திருவிழாவின் போது, தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, அதிகாலையில் பூசாரிகள் கோயில் கிணற்றில் […]

Share....

சிலார் பட்டி காலதேவி அம்மன் கோயில், மதுரை

முகவரி : சிலார் பட்டி காலதேவி அம்மன் கோயில், சிலார் பட்டி, மதுரை மாவட்டம் – 625702. இறைவி: காலதேவி அம்மன் அறிமுகம்: 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள ‘காலதேவி அம்மன்’ சிலை. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது. அதுதான் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில். கோயிலில் […]

Share....

சாமிநாதபுரம் சக்திபுரி இடைச்சீஸ்வரி கோயில்,

முகவரி : சாமிநாதபுரம் சக்திபுரி இடைச்சீஸ்வரி கோயில், சாமிநாதபுரம், திண்டுக்கல் மாவட்டம் – 624618.   இறைவன்: இடைச்சீஸ்வர் இறைவி: இடைச்சீஸ்வரி அறிமுகம்: பழனி – கோவை சாலையில் 18 கி.மீ. தொலைவில் வயலூருக்கு அடுத்த சாமிநாதபுரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இந்த சக்திபுரி உள்ளது. இங்குள்ள ஸ்ரீ சக்திபுரியில் அன்னை பராசக்தி ஸ்ரீ இடைத்தீஸ்வரி ஏன்னும் திருநாமத்துடன் விளங்குகிறாள். இந்த கோவிலின் வாயில் கதவுகளில் சூலங்கள் அமைந்து இருக்கின்றன. மிக நுண்ணிய கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்ட […]

Share....

பேராவூரணி மருங்கபள்ளம் மருந்தீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி : பேராவூரணி மருங்கபள்ளம் மருந்தீஸ்வரர் கோயில், மருங்கபள்ளம், பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டம் – 614802. இறைவன்: ஒளஷதபுரீஸ்வரர், மருந்தீஸ்வரர் இறைவி: பெரிய நாயகி அறிமுகம்:  நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது. ‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள். இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி […]

Share....

பனையூர் ஞானபதீஸ்வரர் கோயில், புதுக்கோட்டை

முகவரி : பனையூர் ஞானபதீஸ்வரர் கோயில் பனையூர், புதுக்கோட்டை மாவட்டம் – 622412. இறைவன்: ஞானபதீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: புதுக்கோட்டை மாவட்டம் பனையூர் பகுதியில் அமைந்துள்ளது ஞானபதீஸ்வரர் ஆலயம். தற்போது இந்த ஊர் மேலப் பனையூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரின் வடகிழக்கில் சிவன் கோவிலும், அதன் எதிரில் ஊரணியும் அமைந்துள்ளது. இது பழங்காலத்திலேயே இவ்வூர் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற கிராமம் என்பதைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. பனையூரில் உள்ள கல்வெட்டுகள் இத்தலத்தின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக இருக்கின்றன. மிகவும் […]

Share....
Back to Top