முகவரி பண்டோரா மகாலட்சுமி கோவில், பாண்டிவாடே பண்டோரா, போண்டா, கோவா – 403401 தொலைபேசி: 0832 233 5355 இறைவன் இறைவி: மகாலட்சுமி அறிமுகம் பன்ஜிம் கடம்பா பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவில், மார்கோ இரயில் நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவில், ஸ்ரீ மகாலட்சுமி கோவில் வடக்கு கோவாவில் அமைந்துள்ளது. ஸ்ரீ மகாலட்சுமி கோவில் பண்டோரா அல்லது பாண்டிவாடே கிராமத்தில் போண்டாவிலிருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் விஷ்ணுவின் மனைவி மகாலட்சுமிக்கு […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
காவலேம் ஸ்ரீ சாந்த துர்கா கோவில், கோவா
முகவரி காவலேம் ஸ்ரீ சாந்த துர்கா கோவில், கபிலேஸ்வரி – காவ்லேம் சாலை, தான்ஷிவாடோ, போண்டா, கோவா – 403401 இறைவன் இறைவி: ஸ்ரீ சாந்த துர்கா அறிமுகம் சாந்த துர்கா கோவில் இந்தியாவின் கோவா மாநிலத்தில் வட கோவா மாவட்டத்தில் போண்டா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள காவலேம் கிராமத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள சக்தி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது கவுட் சரஸ்வத் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு தனியார் கோவில் வளாகமாகும். இந்த கோவில் கோவாவில் மிக […]
வீடூர் ஸ்ரீ ஆதிநாதர் கோவில், விழுப்புரம்
முகவரி வீடூர் ஸ்ரீ ஆதிநாதர் கோவில், வீடூர், விழுப்புரம், தமிழ்நாடு 605652 இறைவன் இறைவன்: ஆதிநாதர் அறிமுகம் கி.பி. 10 ம் நூற்றாண்டில் உருவான இந்த சமணக்கோவில் திண்டிவனம் – விழுப்புரம் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடூர் அணைக்கு முன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பலமுறை புதுப்பிக்கப்பட்டதால் அதன் தொன்மை பற்றிய விவரங்கள் அழிந்து காணப்படுகிறது. இந்த சமணக்கோவில் கருவறை, உள்ளாலை, சிகரம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், மனத்தூய்மைக் கம்பம், பலிபீடம், இராஜகோபுரம், அரணுடன் கூடிய திருச்சுற்று […]
பவ்நாத் மகாதேவர் கோவில், குஜராத்
முகவரி பவ்நாத் மகாதேவர் கோவில், பவ்நாத், ஜுனாகத் மாவட்டம், குஜராத் – 362004 இறைவன் இறைவன்: மகாதேவர் இறைவி: பார்வதி அறிமுகம் மகாதேவர் மந்திர் என்பது ஜூனாகத் அருகே உள்ள பவ்நாத் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். ஜூனாகத் சந்திப்பில் இருந்து 5 கிமீ தொலைவில், பவ்நாத் அமைந்துள்ளது. கிர்னார் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இது குஜராத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும் மற்றும் ஜுனாகத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். ஜுனாகத்தில் […]
தரங்கா ஸ்ரீ அஜிதநாத பகவான் சுவேதாம்பர் சமணக்கோவில், குஜராத்
முகவரி தரங்கா ஸ்ரீ அஜிதநாத பகவான் சுவேதாம்பர் சமணக்கோவில், தரங்கா சாலை, தரங்கா, குஜராத் – 384325 இறைவன் இறைவன்: ஸ்ரீ அஜிதநாத பகவான் அறிமுகம் தரங்கா சமணர் கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெகசானா மாவட்டத்தின் கெராலு நகரத்தின் தரங்கா மலையில் அமைந்த சமணத் தீர்த்தங்கரர்களின் கோயில் வளாகம் ஆகும். தரங்கா சமணக் கோயில், சமணர்களின் இரு பிரிவினர்களான திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்களுக்கு புனிதத் தலமாக விளங்குகிறது. மேலும் பௌத்தர்களுக்கும் இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது. […]
பாலிதான சமணக் கோவில்கள், குஜராத்
முகவரி பாலிதான சமணக் கோவில்கள், பாலிதானா, பாவ்நகர் மாவட்டம், குஜராத் – 364270, இந்தியா இறைவன் இறைவன்: ரிஷபநாதர் அறிமுகம் சத்ருஞ்ஜெய மலை கோயில்கள் அல்லது பாலிதானா கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பவநகர் மாவட்டத்தில், பாலிதானா நகரத்தின் அருகில் உள்ள சத்ருஞ்ஜெய மலையில் அமைந்த சுவேதாம்பர சமண சமயத்தவர்கள் வழிபடும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 900 கோயில்களின் தொகுப்பாகும். சத்ருஞ்ஜெய மலைக்கு நேமிநாதர் தவிர மற்ற அனைத்து சமணத் தீர்த்தங்கரர்கள் வருகை புரிந்துள்ளனர். இங்குள்ள […]
பருத்தியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் (கோதண்ட ராமர் கோவில்), திருவாரூர்
முகவரி பருத்தியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் (கோதண்ட ராமர் கோவில்), பருத்தியூர், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் இறைவன் இறைவன்: இராமர் அறிமுகம் அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணித் தவம் இருந்த இடம், இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பரவசமூட்டும் பருத்தியூர் இராம பரிவாரம். தெற்கு நோக்கிய சன்னதியில் ராம பரிவாரத்தைக் காணலாம். பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி […]
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
முகவரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர், புதுச்சேரி மாவட்டம் – 605 110 இறைவன் இறைவன்: திருக்காமீஸ்வரர் இறைவி: கோகிலாம்பிகை அறிமுகம் சுயம்புவாகத் தோன்றிய திருமேனி – பிரம்மன் பூஜித்த தலம் – சோழ மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் – சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம் – சுகப் பிரசவத்திற்கு உதவும் பிரசவ நந்தியுள்ள தலம் – பங்குனியில் சூரியன் வழிபடும் தலம் – வில்லைப்புராணம் கொண்ட கோவில் […]
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருகோவில், பெரம்பலூர்
முகவரி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருகோவில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம் – 621113 தொலைபேசி எண்: 80565 53356 இறைவன் இறைவி: மதுரகாளியம்மன் அறிமுகம் பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர். வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், ‘அதிதி’ என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அனைத்திற்கும் காரண கர்த்தாவாக நிகழ்ந்து ஆட்டுவிப்பவளும் அவள்தான். திதி குறிப்பிடாமல் […]
பரிசல்துறை அய்யாளம்மன் திருக்கோவில், திருச்சி
முகவரி பரிசல்துறை அய்யாளம்மன் திருக்கோவில், பரிசல்துறை, காவேரி கரை, திருச்சி மாவட்டம் – 621005. இறைவன் இறைவி: அய்யாளம்மன் அறிமுகம் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் காவிரி கரையோரம் பரிசல் துறையில் அய்யாளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கோவில் முன்பு இரண்டு குதிரை சிலைகள் கம்பீரமாக உள்ளன. ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. வடக்கு பிரகாரத்தில் கருப்பண்ணசாமி அருள்பாலிக்கிறார். சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமர பொந்தில் […]