முகவரி அருள்மிகு நிலாத்திங்கள் துண்டப்பெருமாள் திருக்கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளே, காஞ்சிபுரம் – 631 502., இறைவன் இறைவன்: நிலாதிங்கள் துண்டத்தான், இறைவி: நிலாத்திங்கள் துண்டத்தாயார் அறிமுகம் திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்)ஆகும். இத்தலத்தில் பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை […]
Category: திவ்ய தேசங்கள்
திருப்பாடகம் பாண்டவதூதர் திருக்கோயில் – காஞ்சிபுரம்
முகவரி அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம் காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம் போன் +91- 44-2723 1899 இறைவன் இறைவன்: பாண்டவதூதர் இறைவி: சத்யபாமா, ருக்மணி அறிமுகம் திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம் ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து […]
திருவேளுக்கை அழகியசிங்கர் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 6727 1692, 98944 15456 இறைவன் இறைவன்: அழகியசிங்கர், இறைவி: அம்ருத வல்லி அறிமுகம் திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். […]
திருத்தண்கா (தூப்புல்) விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல், காஞ்சிபுரம்-631501. இறைவன் இறைவன்: தீபபிரகாசர் அறிமுகம் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக தூப்புல் பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான திருமால் விளக்கொளி பெருமாள், தீப பிரகாசர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மரகதவல்லி என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தமாகும். புராண காலத்தில் இக்கோயில் திருத்தண்கா என்று அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த இக்கோயில் 108 வைணவ திவ்ய தேச […]
காஞ்சிபுரம் அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்
முகவரி அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள்(அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501 காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91-44-2722 5242 இறைவன் இறைவன்: ஆதிகேசவப்பெருமாள்,அஷ்டபுஜப்பெருமாள், இறைவி: அலமேலு மங்கை அறிமுகம் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த அஷ்டபுஜப்பெருமாள் கோயில். இக்கோயிலின் இறைவனான திருமால் ஆதிகேசவப்பெருமாள் என்றும், தாயார் அலர்மேல்மங்கை, பத்மாசினி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். கோயிலின் தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. புராண காலத்தில் இந்த ஊர் அட்டபுயகரம், அஷ்டபுஜகரம் என்கிற பெயர்களில் அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார், […]
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
முகவரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிமாவட்டம் – 631 501. இறைவன் இறைவன்: வரதராஜன்,பேரருளாளன், இறைவி: மகா தேவி அறிமுகம் கிருதயுகத்தில், அந்நாளில் சத்தியவிரதம் என்றழைக்கப்பட்ட காஞ்சியில் திருவனந்த தீர்த்த கரையில் பிரம்மதேவர் அஸ்வமேத யாகம் நடத்தி மகாவிஷ்ணுவை தரிசனம் தரும்படி வேண்டவும், அப்போது அந்த வேள்வியிலிருந்து விஷ்ணு பகவான் கோடி சூரிய பிரகாசத்துடன் தோன்றி பிரம்மதேவனுக்கு காட்சிதந்தருளினாராம். அதுசமயம் பிரம்மனும் அங்கிருந்த மற்ற தேவர்களும் பெருமான் அதே இடத்தில் நித்யவாசம் செய்தருள வேண்டவே அதற்கிசைந்தாராம் […]
திருக்கோவிலூர் திருவிக்கிரமசுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில், விழுப்புரம்
முகவரி அருள்மிகு திருவிக்கிரமசுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில், திருக்கோவிலூர் – 605757, விழுப்புரம் மாவட்டம். போன் +91- 94862 79990 இறைவன் இறைவன்: திருவிக்கிர பெருமாள் இறைவி: பூங்கோவல் நாச்சியார் அறிமுகம் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், […]
திருவகிந்தபுரம் தேவநாத பெருமாள் திருக்கோயில், கடலூர்
முகவரி அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்தபுரம்-607 401, கடலூர் மாவட்டம். போன்: +91 04142 – 287515 இறைவன் இறைவன்: தேவநாதர் இறைவி: வைகுண்ட நாயகி அறிமுகம் திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோயில், கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் […]
சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில், கடலூர்
முகவரி அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், திருச்சித்ரக்கூடம் -608 001, சிதம்பரம் (சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே) கடலூர் மாவட்டம் போன்: +91- 4144 – 222 552, 98940 69422. இறைவன் இறைவன்: கோவிந்தராஜன் இறைவி: புண்டரீகவல்லி அறிமுகம் அருள்மிகு நடராசப் பெருமானின் திருக்கோயிலினுள்ளேயே அமைந்துள்ள வைணவத் திருத்தலம் திருச்சித்திரக்கூடம். பெருமாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் போக ரெங்கநாதராக அருள்பாலிக்கும் திருத்தலம் திருச்சித்திரக்கூடம். மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் தான் […]
திருபார்த்தன்பள்ளி தாமரையாள் கேள்வன் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)-609 106. நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91- 4364-275 478. இறைவன் இறைவன்: தாமரையாள்கேள்வன் இறைவி: தாமரை நாயகி அறிமுகம் திருப்பார்த்தன் பள்ளி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு அருகிலும் திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து நடந்தே செல்லலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று. […]