முகவரி : ஆதம்பாக்கம் சுப்ரமணிய சுவாமி கோயில், சென்னை பிருந்தாவன் நகர், வேளச்சேரி, சென்னை மாவட்டம், தமிழ்நாடு 600088 இறைவன்: சுப்ரமணிய சுவாமி இறைவி: வள்ளி & தேவசேனா. அறிமுகம்: சுப்ரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் ராஜகணபதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. வேதபுரீஸ்வரர் கோயில், கோதண்டராமர் கோவில் மற்றும் லட்சுமி குபேரர் கோயில். இக்கோயிலில் 4 முக்கிய […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
திருலோகி க்ஷீரப்தி சயன நாராயணப் பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி : திருலோகி க்ஷீரப்தி சயன நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருலோகி, திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் – 609804. இறைவன்: க்ஷீரப்தி சயன நாராயணப் பெருமாள் இறைவி: க்ஷீர நாயகி அறிமுகம்: தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருலோகி கிராமத்தில் அமைந்துள்ள க்ஷீரப்தி சயன நாராயணப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோயில் காவிரி ஆற்றின் கிளையான பழவாறு வடக்கரையில் அமைந்துள்ளது. திருலோகி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு தென்கிழக்கே இக்கோயில் […]
தொட்டியம் அனலாடீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி : தொட்டியம் அனலாடீஸ்வரர் திருக்கோயில், தொட்டியம், திருச்சி மாவட்டம் – 621215. இறைவன்: அனலாடீஸ்வரர் இறைவி: திரிபுர சுந்தரி அறிமுகம்: அனலாடீஸ்வரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் அனலாடீஸ்வரர் என்றும் அம்பாள் திரிபுர சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மபுரம், திரிபுரசம்ஹாரஷேத்திரம், மத்தியாசலஷேத்திரம், துவஷ்டபுரி போன்ற பெயர்களில் புராண காலங்களில் இத்தலம் அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுடைய அட்ட வீராட்ட செயல்களில் ஒன்றான திரிபுரங்களை எரித்தலின் போது சிவபெருமான் அம்பின் பொறி தொட்டுச் சென்ற இடமாகும். பிரம்மன் […]
இலுப்பூர் பொன்வாசி நாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி : இலுப்பூர் பொன்வாசி நாதர் திருக்கோயில், இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் – 622102. இறைவன்: பொன்வாசி நாதர் இறைவி: பொன்னம்பாள் அறிமுகம்: இலுப்பை மரங்கள் நிறைந்து விளங்கியதால் ‘இலுப்பையூர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே மருவி தற்போது ‘இலுப்பூர்’ என அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது இந்த பொன்வாசி நாதர் ஆலயம். விராலிமலையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த […]
சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
முகவரி : சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் திருக்கோயில், சிற்றம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் – 631402. இறைவன்: கும்பேஸ்வரர் இறைவி: குழந்தைவல்லி அறிமுகம்: பல்லவர்களின் குடவரைக் கோவிலுக்கு அடுத்த நிலையில் இருப்பது அவர்களின் கலைப்பணியில் உருவான கருங்கற் கோவில்கள். அப்படி உருவாக்கப்பட்ட பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம். இந்த செய்தியை அந்த ஆலயத்தில் கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், […]
கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி : கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கத்திரிநத்தம், தஞ்சாவூர் மாவட்டம் – 613501. இறைவன்: காளகஸ்தீஸ்வரர் இறைவி: காளகஸ்தீஸ்வரர் அறிமுகம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காளகஸ்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த […]
ஆங்கரை மருதாந்த நாதேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி : ஆங்கரை மருதாந்த நாதேஸ்வரர் திருக்கோயில், ஆங்கரை, லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம் – 621703. இறைவன்: மருதாந்த நாதேஸ்வரர் இறைவி: சுந்தர காஞ்சனி அம்பாள் அறிமுகம்: திருச்சி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் உள்ளது மருதாந்த நாதேஸ்வரர் கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மருதாந்த நாதேஸ்வரர். இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது. திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் லால்குடிக்கு 2 கிலோமீட்டர் முன்பாக […]
பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், விழுப்புரம்
முகவரி : அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், பஞ்சவடீ – 605 109. விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 413 – 267 1232, 267 1262, 267 8823 இறைவன்: ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் அறிமுகம்: 12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்துத் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் விநாயகரும், இடதுபக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன், பரதன் ஆகியோரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி […]
கௌரிவாக்கம் பஞ்சமுக அனுமன் திருக்கோயில், சென்னை
முகவரி : அருள்மிகு கௌரிவாக்கம் பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கௌரிவாக்கம், சென்னை – 600073. இறைவன்: பஞ்சமுக அனுமன் அறிமுகம்: இத்தலம் சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் உள்ள கௌரிவாக்கத்தில், பழனியப்பா நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. புராண முக்கியத்துவம் : இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் […]
கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி : அருள்மிகு ஆதிசக்தீஸ்வரர் திருக்கோயில், கோபுராபுரம், பாலக்கொல்லை வழி கடலூர் – 606003. போன்:+91 4143- 260216, 84891-15307 இறைவன்: ஆதிசக்தீஸ்வரர் இறைவி: ஆதிசக்தீஸ்வரி அறிமுகம்: காசிக்கு வீசம் அதிகம் விருத்தகாசி எனும் திருமுதுகுன்றத்திற்கு ஈசானிய மூலையில், 6 கி.மீ., தூரத்தில் கோபருவதம் எனும் தேவஸ்தான கோபுராபுரம் உள்ளது. நந்தி தேவர், உமாதேவிக்குறிய வழிபாட்டிற்கு உதவி செய்ததால், இத்தலம் கோபருவதம் என்றும், ஆதியில் உமாதேவி சிவனை வழிபட்டதால், ஆதிசக்தீசுரம் என்றும் கூறப்பட்டது. உமாதேவி வழிபாட்டிற்கு பயன்படுத்தியதுதான் […]