Saturday Jan 18, 2025

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் (கேது ஸ்தலம்), கீழப்பெரும்பள்ளம்.

முகவரி அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில், ”கேது ஸ்தலம்” கீழப் பெரும்பள்ளம், வாணகிரி அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம். இறைவன் இறைவன்: நாகநாத சுவாமி, இறைவி: செளந்தரநாயகி அறிமுகம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும். இத்தலத்தின் மூலவர் நவக்கிரங்களில் ஒருவரான கேது தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவரை நாகநாதர் எனவும், அம்பாள் சவுந்தர்யநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார். நுழைவாயிலில் இறைவன் தேவியுடன் காளைமீது அமர்ந்த நிலையில் உள்ள சுதைச்சிற்பம் […]

Share....

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம்

முகவரி அருள்மிகு நாகநாத திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம் – 612204 இறைவன் இறைவன்: நாகேஸ்வரர், நாகநாதர் இறைவி: பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி) அறிமுகம் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 […]

Share....

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருஇரும்பூளை (ஆலங்குடி)

முகவரி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருஇரும்பூளை (ஆலங்குடி) வலங்கைமான் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 612801 தொலைபேசி: 04374 269407 இறைவன் இறைவன்: ஆபத்சகாயேஸ்வரர் , இறைவி: ஏலவார் குழலியம்மை அறிமுகம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். [1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும். ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து […]

Share....

அருள்மிகு சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு

முகவரி அருள்மிகு சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு – 609114. Phone: 04364 256 424 இறைவன் இறைவன்: சுவேதாரன்யேஸ்வரர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி. அறிமுகம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. […]

Share....

அருள்மிகு வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தீஸ்வரன்கோவில் அஞ்சல் சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609117 இறைவன் இறைவன்: வைத்தியநாதர், இறைவி : தையல்நாயகி அறிமுகம் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் […]

Share....

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு

முகவரி அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி மாநிலம் – 609607 தொலைபேசி எண் 4368 236530 இறைவன் இறைவன்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் இறைவி: பிராணேஸ்வரி, பிராணாம்பிகை அறிமுகம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோ‌ழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சனீஸ்வரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீஸ்வரரை […]

Share....

கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், கஞ்சனூர் அஞ்சல் வழி துகலி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 609804 இறைவன் இறைவன்: அக்னீஸ்வரர், இறைவி: கற்பகாம்பாள் அறிமுகம் கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர்(சந்திரன்) திருக்கோவில் திங்களூர்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர் – 613 204, தஞ்சாவூர் மாவட்டம்., தொலைபேசி எண் 4362 – 262499 இறைவன் இறைவன்: ஸ்ரீ கைலாசநாதர், இறைவி: பெரியநாயகி. அறிமுகம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த திங்களூர் கைலாசநாதர் கோயில்இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் கைலாசநாதர் என்கிற பெயரிலும், அம்பாள்பெரியநாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் […]

Share....

அருள்மிகு சூரியனார் கோவில், திருமங்கலக்குடி

முகவரி அருள்மிகு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில் திருமங்கலக்குடி, திருமங்கலக்குடி அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN – 612102 இறைவன் இறைவன்: சூரியபகவான் இறைவி: உஷா தேவி அறிமுகம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம் பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் […]

Share....
Back to Top