Wednesday Dec 25, 2024

மேலூர் (மேலநெடுங்காட்டாங்குடி) அகத்தீஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி : மேலநெடுங்காட்டாங்குடி அகத்தீஸ்வரர் சிவன் கோயில், மேலூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அன்னபூரணி அறிமுகம்: திருவாரூரின் வடக்கில் உள்ள கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து நாகூர் சாலையில் உள்ள சூரனூரின் தெற்கில் 3-கிமீ தூரம் சென்றால் மேலநெடுங்காட்டாங்குடி அடையலாம். தற்போது மேலூர் என அழைக்கப்படுகிறது. பல காலமாக சிதிலம் அடைந்த நிலையில் இருந்த கோயில் முற்றிலும் புதிதாய் மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி அன்னபூரணி தெற்கு […]

Share....

சிதம்பரம் ஸ்ரீ சக்தி பாலநரமுக விநாயகர் திருக்கோயில், கடலூர்

முகவரி : சிதம்பரம் ஸ்ரீ சக்தி பாலநரமுக விநாயகர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன்: ஸ்ரீ சக்தி பாலநரமுக விநாயகர் அறிமுகம்: பார்வதியால் உருவாக்கப்பட்டபோது பிள்ளையாருக்கு மனிதமுகம்தான் பின்னர்தான் சிவபிரானால் மனிதத்தலை கொய்யப்பட்டு யானைத்தலை ஏற்பட்டது. ஆகவே முதன்முதலில் உருவான பிள்ளையார் ஆதிவிநாயகர் அல்லது நரமுக விநாயகர் எனப்பட்டார். வடமொழியில் நரன் என்றால் மனிதன் என்பதாகும். சிதம்பரம் நகரின் தெற்குவீதியில் சோழர் கால கட்டுமானத்துடன் வடக்கு நோக்கிய கோயில் ஒன்று இருந்தது, […]

Share....

திருமாலயன்பொய்கை காளகண்டேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : திருமாலயன்பொய்கை காளகண்டேஸ்வரர் சிவன்கோயில், திருமாலயன்பொய்கை, கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105 இறைவன்: காளகண்டேஸ்வரர் இறைவி: வரந்தர நாயகி அறிமுகம்: திருவாரூர் – கங்களாஞ்சேரி நாகூர் சாலையில் சோழங்கநல்லூரின் வடக்கில் மூன்று கிமீ  தொலைவில் உள்ளது திருமாலயன் பொய்கை. சோழங்கநல்லூரில் இருந்து கிராமசாலை தான், சற்று சிரமத்துடன் செல்ல வேண்டும். இறைவன் -காளகண்டேஸ்வரர் இறைவி-வரந்தர நாயகி திருமாலயன் பொய்கை திருத்தலம். பல சிறப்புடைய தலம் எனினும் பல ஆண்டுகளாக வழிபாடின்றி இடிந்து சிதைந்து […]

Share....

கீழஓதியத்தூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கீழஓதியத்தூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், கீழஓதியத்தூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105. தொடர்பு எண். 8098276699 இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: வேதநாயகி அறிமுகம்: வேதங்கள் நான்கினையும் ஓதியவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் என்பதால் ஓதியன் ஊர் எனப்பட்டது. சூரனை அழிக்கப் போகும் முன்னர் பார்வதி தேவி அவருக்கு வேல் எனும் ஆயுதத்தை தந்தார். அந்த வேலினை பெற்றுக் கொள்ளும் முன் ஒன்பது கடம்ப தலங்களில் […]

Share....

தெற்காலத்தூர் நாகநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ராதாமங்கலம் (தெற்காலத்தூர்) நாகநாதர் சிவன்கோயில், தெற்காலத்தூர், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611109. இறைவன்: நாகநாதர் இறைவி:  சாந்தநாயகி அறிமுகம்: ராகுகேதுமங்கலம் எனப்படும் ராதாமங்கலம், தற்போது தெற்காலத்தூர் எனப்படுகிறது. கீழ்வேளூரிலிருந்து தேவூர் செல்லும் சாலையில் கடுவையாறு செல்கிறது அதன் வடகரையில் 2 கி.மீ. சென்றால் ராதாமங்கலம் எனப்படும் தெற்காலத்தூர் உள்ளது. சாலையோர கிராமம் தான், இங்கு பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது நாகநாதர் கோயில். இறைவன் கிழக்கு நோக்கியும், […]

Share....

ஆத்தூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஆத்தூர் சிவன்கோயில், ஆத்தூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105. இறைவன்: சிவன் அறிமுகம்: திருவாருரின் கிழக்கில் உள்ள கீவளூரில் இருந்து தேவூர் செல்லும் பிரதான சாலையில் இலுப்பூர்சத்திரம் என ஒரு நிறுத்தம் உள்ளது, இங்கிருந்து மேற்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது ஆத்தூர். சாலையோரத்தில் உள்ளது சிவன் கோயில் கிழக்கு நோக்கிய சிறிய கோயிலாக உள்ளது. கிழக்கு நோக்கிய விநாயகர் கோயிலும் அதை ஒட்டினாற்போல் கிழக்கு நோக்கிய சிவனின் கருவறையும் உள்ளது. […]

Share....

வடக்காலத்தூர் அண்ணாமலையார் (அண்ணாமலைநாதர்) சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : வடக்காலத்தூர் அண்ணாமலையார் (அண்ணாமலைநாதர்) சிவன்கோயில், வடக்காலத்தூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன்: அண்ணாமலையார் என்றும் அண்ணாமலைநாதர் இறைவி: உண்ணாமுலையம்மன் அறிமுகம்:                  இக்கோயில் கீழ்வேளூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் 4 கிமீ சென்றால் இலுப்பூர்சத்திரம் இங்கிருந்து கிழக்கில் 2 கிமீ தொலைவில் உள்ளது வடக்காலத்தூர். ஊரின் ஈசான்ய மூலையில் இக்கோயில் உள்ளது. தானே தோன்றியவராக உள்ளதால் இறைவன் அண்ணாமலையார் என்றும் அண்ணாமலைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கி கோயில் உள்ளது தெரு கோயிலின் பின்புறம் […]

Share....

செம்மங்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : செம்மங்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், செம்மங்குடி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612603. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: கும்பகோணம் – கொல்லுமாங்குடி சாலையில் 23வது கிமீ-ல் உள்ளது ஸ்ரீகண்டபுரம், இங்குள்ள Shell petrol bunk எதிரில் செல்லும் சாலையில் மூன்று கிமீ தூரம் தெற்கில் சென்றால் செம்மங்குடி உள்ளது. திருவீழிமிழலை வடக்கில் உள்ள அன்னியூர் சென்று கிழக்கில் ஒரு கிமீ சென்றாலும் இவ்வூரை அடையலாம். பல செம்மங்குடிகள் இம்மாவட்டத்தில் உள்ளன. குபேரன் […]

Share....

வீரபோகம் விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : வீரபோகம் விஸ்வநாதர் சிவன்கோயில், வீரபோகம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் எட்டாவது கிமீ-ல் வலப்பாறு ஓடுகிறது அதன் தென் கரையில் சென்றால் விற்குடி தாண்டி வீரபோகம் அடையலாம். இதற்க்கு நான்கு கிமீ தூரம் இருக்கும். போரில் வீரம் காட்டியதற்காக அவர்களுக்கு வரியிலா நிலங்கள் அளிக்கப்படுவதே வீரபோகம் ஆகும். இத்தகைய வீரபோக நிலங்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளன. நாகை வட்டத்தில் […]

Share....

தேவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : தேவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தேவூர், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611109. இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: பர்வதவர்த்தினி அறிமுகம்: இவ்வூர் திருவாரூர்-நாகை சாலையில் உள்ள கீழ்வேளூர் என்ற திருத்தலத்தின் தெற்கில் மூன்று கிமீ தூரத்தில் தேவூர் உள்ளது, தேவர் வழிபட்டதால் தேவூர் எனப்படுகிறது, தென்காட்டூர் என ஒரு பெயரும் உள்ளது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. ஊரின் மத்தியில் கோச்செங்கட் சோழன் கட்டிய அழகிய மாடக்கோயில் மற்றொன்று ஊரின் தென்கிழக்கில் உள்ள […]

Share....
Back to Top