Wednesday Dec 18, 2024

தீராதநோய்களைதீர்க்கும்நெய்யாற்றங்கரைகிருஷ்ணர்

தன்னை மரத்தில் மறைத்து வைத்து, உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு, மன்னன் மார்த்தாண்டவர்மா அமைத்த ஆலயம், புனிதம் மிக்க அம்மச்சிபிலா மரம் உள்ள கோவில், நெய்யாறறங்கரையில் அமைந்த சிறப்பு மிக்க தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, கேரள மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்யாற்றங்கரை கிருஷ்ணசுவாமி கோவில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி, அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர், மார்த்தாண்ட […]

Share....

பலவகை வடிவான தீர்த்தங்கள்

புனிதமான நீர்நிலைகள் யாவும் இறைவனின் திருமேனிகளேயாகும். பெருங் கடல்கள், வற்றாது ஓடும் ஜீவநதிகள், மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகள், அருவிகள், குளங்கள், ஏரிகள், சுனைகள் யாவும் இறைவனின் பல்வகை வடிவங்களே ஆகும். இதை உணர்த்தும் வகையில் இவற்றின் கரையில் சிவபெருமான் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றான். மனித நாகரிகங்கள் யாவும் ஆற்றின் கரையிலேயே தோன்றியதாகும். எனவே ஆறுகள் மானுட வாழ்வில்முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நாகரிகத்தில் சிறப்படைந்த மனிதன் ஆதியில் ஆற்றங்கரைகளில் இறைவனுக்குத் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டான். இவை, ஆற்றுத்தளிகள் […]

Share....

​மகா சிவராத்திரி: இரவு முழுவதும் கண் விழிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?

சக்திக்கு ஒன்பது ராத்திரி. அது நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி. அது சிவராத்திரி. சைவமக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம்  கிடைக்கும் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு  ஜாமத்திலும் பூஜை […]

Share....

திருநாவுக்கரசு நாயனார் அற்புதங்கள்

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார். இவரைத் திருஞானசம்பந்தர், ‘அப்பர்’ (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால், இவரைத் தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர். அவர் பாடிய தலங்களில் […]

Share....

பொற்றாமரைக்குளம்

மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பொற்றாமரைக்குளம் செவ்வக வடிவில்,165 x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது. பொன் + தாமரை + குளம் என பொருள்படும் வகையில் பொற்றாமரைக்குளம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இதன் வடக்கு கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அதோடு தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. […]

Share....

அப்பூதியடிகள்நாயனார்

அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார் சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார் என்று எடுத்துரைக்கப்படுகிறது. திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார். திருநாவுக்கரர் அப்பூதியடிகளின் இந்த நற் தொண்டினை அறிந்து அவரில்லத்திற்கு சென்றார். திருநாவுக்கரசருக்கு அப்பூதியடிகள் உணவிட ஆயத்தம் செய்த போது, […]

Share....

திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்:  தனிச்சிறப்பு

திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், அல்லது யதோத்காரி பெருமாள் கோயில் (Yathothkari Perumal Temple), காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம். கோவில் தனிச்சிறப்பு : * சரஸ்வதிக்காகவும், திருமழிசை ஆழ்வாருக்காகவும் பெருமாள் காட்சி கொடுத்த தலம். * பராந்த சோழனால் இக்கோவிலுக்கு 367 களஞ்சியம் பொன் பரிசாக வழங்கப்பட்டது. *மிக அரிய கோலமாக, பெருமாள் இடது கையை தலைக்கு வைத்து சயனித்து உள்ளார். பெருமாளுக்கு அருகில் சரஸ்வதி தேவி அமர்ந்திருக்கிறார். தலபுராணம் பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரதத் தலமான காஞ்சிக்கு வந்து, […]

Share....

மகிமைமிகு திருநீறு…

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரி்யம் என்றும் கூறப்படும். எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. அணியும் காரணம் மந்திரமாவது நீறு” – திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = […]

Share....

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி […]

Share....

அஷ்டமி அன்று செய்ய கூடாதவை;கூடியவை

ஜோதிடத்தின் படி அஷ்டமி திதியானது ஒரு முக்கியமான திதியாகும் அஷ்டமியில் தொட்டது எதுவும் துலங்காது என்று கூறும் வழக்கமானது காணப்படுகின்றது ஆனாலும் இந்த திதி இறைவழிபாடுகளுக்கும் தெய்வீக காரியங்களை ஆற்றவும் மிகுவும் பொருத்தமானதாகும். ஏனெனில் கிருஷ்ணன் பிறந்தது இந்த திதியில் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். இந்த தினத்தில் சில விஷயங்களை நாம் தவிரத்து கொள்வது நல்லதாகும். அஷ்டமி அன்று செய்ய கூடாதவை இந்த தினத்தில் ஆரம்பிக்கின்ற வேலைகள் முழுமை அடையாது என்பது இந்து மதத்தில் […]

Share....
Back to Top