திருமலைராயன்பட்டினம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்
முகவரி :
திருமலைராயன்பட்டினம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609606.
இறைவன்:
ஏகாம்பரேஸ்வரர்
இறைவி:
காமாட்சி
அறிமுகம்:
புதுவை அரசின் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோயிலில் புதிதாக விஸ்வகர்மா காயத்ரிதேவி பிரம்மா மகாலட்சுமி லிங்கோத்பவர் நந்தி மண்டபம் 2020-ல் குடமுழுக்கு நடத்தப்பெற்றது. இக்கோயில் விஸ்வகர்மா சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. திருமலைராயன் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பெரிய பட்டினம் ஒன்றை உருவாக்கி அவரது பெயரை சூட்டினார், அதில் 108 சிவாலயங்களை உருவாக்கி வைத்திருந்தார், காலப்போக்கில் பல அழிந்துபட்டன சில கோயில்கள் மீளுருவாக்கம் பெற்று புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கின்றன. அதில் இந்த ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் ஒன்று.
கிழக்கு நோக்கிய திருக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது அதனை தண்டி உள்ளே சென்றால் இறைவன் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார் அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். கருவறை வாயிலில் இரண்டுதுவாரபாலகர்களும், வெளி வாயிலில் இரண்டு துவாரபாலகர்களும் உள்ளனர். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன் ஆகியோர் உள்ளனர். இங்குள்ள விநாயகர் அக்கசாலை விநாயர் எனவும் அழைக்கப்படுகிறார். சூரியன் பைரவர் பாம்பணி அம்மன் ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலுக்கென ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது புவி வெப்பமடைந்ததாம், அதனால் இறைவன் எழுந்தருளி மழை பெய்ய வைத்தாராம். அதனால் இங்கு வருட உற்சவமான ஆடி கடைவெள்ளி அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அப்போது இறைவன் ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியுடன் வீதி உலா செல்லும்போது வருடாவருடம் மழைபெய்யுமாம் இக்காட்சி இக்கோயிலின் முக்கிய நிகழ்வாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமலைராயன்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருமலைராயன்பட்டினம், காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி