மருங்கூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்
முகவரி
மருங்கூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், மருங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்
இறைவன்
இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி
அறிமுகம்
மருங்கு என்றால் செல்வசெழிப்புள்ள என பொருள். மருங்கில் என்றால் கரையோரம் என பொருள் ஆற்றின் கரையோரம் உள்ளதால் மருங்கூர் ஆகியிருக்கலாம். திருமருகலின் நேர் தெற்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது இந்த மருங்கூர். இங்கு ஒரு சிவாலயமும் ஒரு வைணவ ஆலயமும் உள்ளது. ஊரின் அக்கிரஹார தெருவின் மத்தியிலுள்ளது சிவன்கோயில். பிரதான வாயில் தெற்கிலுள்ளது. கிழக்கு நோக்கிய கருவறை கொண்ட இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி சௌந்தரநாயகி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். கருவறை வாயிலிலும் சுதையாலான துவாரபாலகர்கள் உள்ளனர். இருவரது கருவறைகளையும் இணைக்கிறது ஒரு பெரிய சதுரமான மண்டபம் அதில் நந்தி இறைவனை நோக்கியுள்ளார். கருவறை முகப்பு மண்டப வாயிலில் வலதுபுறம் சனிபகவான் கிழக்கு நோக்கி ஒரு மாடத்தில் உள்ளார். கோயிலின் கருவறை சுற்றி ஒரு உயர்ந்த பிரகாரமேடையமைப்பு உள்ளது, அது பார்க்க மாடக்கோயில் போல தரைமட்டத்தில் இருந்து நான்கு அடிக்குமேல் உயர்ந்து காணப்படுகின்றது. கருவறை கோட்டத்தில் தக்ஷ்ணமூர்த்தி, பெருமாள், துர்க்கை உள்ளனர். பிரம்மனின் இடம் காலியாக உள்ளது. சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். இரு பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளனர். வடமேற்கில் ஐயப்பனுக்கு தனி கோயில் எழுப்பப்பட்டுள்ளது. புதிய சேர்க்கையாக இருத்தல் கூடும். கிழக்கு பக்கம் ஒரு திட்டி வாசல் உள்ளது அதன் இருபுறங்களிலும் சிறிய மாடங்களில் சூரியன் மற்றும் பைரவர் உள்ளனர். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருங்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
0