64 வகை அபிஷேகம் நடைபெறும் கால பைரவர் ஆலயம்!!!
64 வகை அபிஷேகம் நடைபெறும் கால பைரவர் ஆலயம்!!!
இந்தியாவில் அமைந்துள்ள 2 கால பைரவர் கோவிலில் இரண்டாவதாக உள்ள கோவில் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தட்சணகாசி கால பைரவர் கோவில் சிறப்பு பற்றி காண்போம்..
இந்தியாவில் இரண்டு இடங்களில் உள்ளது கால பைரவர் கோவில். காசியில் அமைந்துள்ள தட்சண கால பைரவர் கோவில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தட்சணகாசி கால பைரவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆதியும் அந்தமும் இவரே என்று மக்களால் போற்றப்படுகிறது.
மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர் ஆவார். இந்த உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார். முதலில் காலபைரவருக்கு தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்று ஜோதிடர்கள் கூறினர். அவர்கள் சொன்னதற்கு இனங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார் என வரலாறு கூறுகின்றன. இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. மன்னர் போருக்கு செல்லும் முன் இங்கு வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார் என்றும், இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. காலை 6 மணி முதலே கால பைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம். அஷ்டலட்சுமி யாகம், தன கார்சனகுபேர யாகம், அதிரத்ர யாகம் ஆகிய யாகங்கள் நடைபெறுகின்றன. இங்கு ராஜ அலங்காரத்தில் கால பைரவர் #ஈசனை தேடி குழு பதிவு# பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு கால பைரவருக்கு 64 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 1008 அர்ச்சனை, 28 ஆகம பூசைகள், 4 வேதபாராயணம் சிறப்பு உபகார பூஜைகள் மற்றும் மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் இரவு 10 மணி முதல் 12 மணி வரை குருதியாகம் நடக்கிறது.
மேஷராசிகாரர்கள் காலபைரவரின் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீருமாம், இப்படி 12 ராசிகாரர்களும் காலபைரவரை கும்பிட்டால் தோஷங்கள் தீரும் என்று மக்களால் நம்பப்படுகிறது. நினைத்த காரியம் நிறைவேற, காலபைரவர் சன்னதியில் பூசணியால் விளக்கேற்றுகின்றனர். பின்னர் கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வருகின்றனர். இந்த #ஈசனை தேடி குழு பதிவு# வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு தேய்பிறை அஷ்டமிகளில் திருவிழா போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.