586 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு
மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து ஆய்வு மேற்கொண்டதில், தீர்த்தம் அடுத்த
ஹளே கிருஷ்ணாபுரம் கிராமத்தில், 586 ஆண்டு பழமையான விஜயநகர காலத்து,
கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்
கூறியதாவது:
பசப்பா என்பவரது வீட்டின் அருகே கருங்கல் குண்டை சுற்றிலும், 20 அடி நீளத்தில், 7
வரிகளில் இக்கல்வெட்டு உள்ளது. மேல்புறம் திரிசூலமும், கீழ்புறம் அழகிய காளையும், அருகே குடை மற்றும் கொடியும் கோட்டுருவமாய் காட்டப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டு, 586 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர மன்னர், 2ம் தேவராயன் காலத்தை
சேர்ந்தது. அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய முள்வாய் ராஜ்ஜியத்தை, தற்போதைய கர்நாடகா மாநிலம் முலுபா கல், லக்கண தண்ணாயக்கர் ஆண்டு வந்தார். இங்கு தியாகப்பெருமாள் என்னும் பெயரில் சிவன் கோவில் அப்போ து இருந்துள்ளது. கோவில் பூஜை செலவிற்காக பொன்னக்கோன் பள்ளியை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
இவ்வா று அவர் கூறினா ர்.