46 புதூர் ஜோதி மகேஸ்வரன் திருக்கோயில், ஈரோடு
முகவரி :
46 புதூர் ஜோதி மகேஸ்வரன் திருக்கோயில்,
46 புதூர்,
ஈரோடு மாவட்டம் – 638002.
இறைவன்:
ஜோதி மகேஸ்வரன்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
ஈரோடு அருகே உள்ள 46 புதூர் என்ற சிறிய கிராமத்தில் ஜோதி மகேஸ்வரன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளது சிவபெருமான் ஆலயம். கிழக்கு நோக்கிய பழமையான ஆலயம். பழமையான இந்த ஆலயத்தில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிவனடியார்களின் முயற்சியால் 25 ஆண்டுகளாக மீண்டும் வழிபாடு நடைபெற்று வருகின்றன. பூஜைகள் நடந்து கொண்டிருந்தாலும் புனரமைப்பு பணிக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறது. கோயில் ஈரோட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் 46 புதூர் கிராமத்தில் இந்த ஆலயம் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
பலிபீடம் நந்தி தேவரை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் காவல் தெய்வமாய் இரண்டு நாகர்கள் நிற்கின்றன. அர்த்த மண்டபத்தில் விநாயகர், சந்தன லிங்கம், நடராஜர் தரிசனம் உள்ளது. கருவறையில் லிங்கத் திருவுருவம் ஜோதி லிங்கேஸ்வரர் தாமரை பீடத்தில் எழுந்தருளி உள்ளார். தமிழில் சுடர்க்கொழுந்து நாதர் என அழைக்கப்படுகிறார். அவரது லிங்கத் திருமேனியில் சூலக்குறி காணப்படுகின்றது. பிரமிடு போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கருவறை கோபுரத்தின் 148 நாக உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. சௌந்தரநாயகி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
நம்பிக்கைகள்:
ஜோதி மகேஸ்வரரை வழிபட்டால் வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும், திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு, கல்வி உள்பட அனைத்து நற்பலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழாக்கள்:
வில்வ மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட இந்த ஆலயத்தில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி தினத்தில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. வழிபாட்டு முறையில் பன்னிரு திருமுறைகளை கொண்ட மகா சிவராத்திரியன்று இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
46 புதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்